Shahul Blog

Search This Blog

Sunday, January 18, 2009

அன்று அப்பாவும் அம்மாவும் ஒரு வேலை விஷயமாக வெளியூர் போயிருந்தார்கள். வீட்டில் அந்தப் பதினோரு வயதுச் சிறுமி மட்டுமே! ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடி ஜாலியாகக் குதித்து விளையாடிக்கொண்டிருந்த அவளுக்கு திடீரென வித்தியாசமாக ஏதோ ஒரு ஃபீலிங். உடம்பெல்லாம் வலித்தது. குறிப்பாக வயிறு! அவள் தன் வயிற்றைப் பிடித்தபடி உட்கார, அவள் கண்ட்ரோலே இல்லாமல் யூரின் போல ஏதோ வெளிவந்தது. அந்தச் சிறுமி பயந்துவிட்டாள். கை வைத்துப் பார்க்க, கீழே வெளிவந்தது ரத்தம்!.... அவளுக்கு தான் `பெரியவளாகி' விட்டோம் என்ற விஷயம் தெரியவில்லை.... இதுவரை தன் அம்மாவோ, வகுப்பில் தோழிகளோகூட அதுபற்றிப் புரியும்படி அவளுக்கு எடுத்துச்சொன்னதில்லை என்பதால், தனக்குள் இருந்து ஒரு கட்டுப்பாடே இல்லாமல் ரத்தம் வழிவது கண்டு பயந்துவிட்டாள்.தனக்கு ஏதோ கட்டுப்படுத்த முடியாத பெரிய வியாதி வந்துவிட்டது. இனி வாழ்க்கையில் தான் எப்படி மற்றவர்கள் முன் தலைகாட்டுவது என்று பயந்து குறுகினாள். தன் அப்பா அம்மாவுக்குத் தெரிந்தால் தன்னை இனி ஏற்றுக் கொள்வார்களோ, மாட்டார்களோ என்றெல்லாம்கூட அவள் கற்பனை ஓடியது.யாருக்கும் தொந்தரவில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவள் அன்று செய்து கொண்ட முடிவு... தற்கொலை!அந்தச் சிறுமியின் அதிர வைத்த தற்கொலை ஏற்படுத்திய மாபெரும் பாதிப்பால் உலகம் முழுக்க உருவானதுதான், தற்கொலையை தடுக்கும் அமைப்பு! `சிநேகா' என்ற பெயரில் நம்மூரிலும்கூட இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.மேலே சொன்ன சம்பவம் ஒரு மேற்கத்திய நாட்டில் நடந்தது. எக்ஸ்போஷர்கள் அதிகமுள்ள மேற்கத்திய நாட்டில் இருக்கும் ஒரு சிறுமிக்கே தன் உடலில் ஏற்படும் மாறுதல் குறித்து இத்தனை குழப்பங்கள் என்றால், நம் நாட்டுச் சிறுமிகள், டீன்ஏஜர்களின் நிலைபற்றிச் சொல்லவும் வேண்டுமா?நமது நாட்டில், வளர் இளம் பருவ பதின் வயதுச் சிறுமிகள் தங்களுக்குள் ஏற்படும் மாற்றத்தை எந்தளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்? தன் உடலுறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும் `பர்சனல் ஹைஜீன்' பற்றி எந்தளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள்.இப்படியொரு அடிப்படைக் கேள்வியோடுதான் பெண்களின் வளர்ச்சி குறித்து ஆராய்ந்து அவர்களுக்கு உதவும் எங்கள் நிறுவனம் மூலமாக இந்த வயதுப் பெண்களை அணுகி வருகிறோம்! ஆனால் இதில் எங்களுக்குக் கிடைத்த பதில் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.கிராமப் பகுதியைச் சேர்ந்த பதின் வயது டீன்ஏஜ் பெண்களிடம் நாங்கள் சில அடிப்படைக் கேள்விகள் கேட்டோம்!உதாரணத்துக்கு ``இரவில் எழுந்து யூரின் போகும்போது, அந்த உடலுறுப்புகளை தண்ணீர்விட்டுக் கழுவிவிட்டுப் படுக்கிறீர்களா?'' என்று கேட்டோம்!``ஐய்யே!... அதெல்லாம் செய்றதில்லை! பகல்லே யூரின் போனாக்கூட கழுவும் பழக்கம் எங்களுக்கு இல்லே!'' என்றார்கள் சிறுமிகள் காஷுவலாக!``இதைப் பற்றியெல்லாம் உங்க அம்மா சொல்லித் தரவில்லையா?'' என்று கேட்டதும், சற்றே யோசித்துப் பார்த்துவிட்டு, ``எங்க அம்மாவே அப்படிக் கழுவறதில்லே!'' என்று சொன்னார்கள் கோரஸாக.பர்சனல் சுத்தம் பற்றி அந்தளவுக்குத்தான் நம்மூர் பெண்களில் சிலருக்கே தெரிந்திருக்கிறது.நகரங்களில்... அதுவும் டாய்லெட் அட்டாச்டு அறைகளில் வசிக்கும் நிலையிலுள்ள சில குடும்பங்களில் வசிக்கும் பெண்கள் தண்ணீர் அருகே இருக்கிறதே என்ற நினைவிலோ, அல்லது பழக்க தோஷத்திலோ அல்லது எக்ஸ்போஷர்கள் தந்த விழிப்புணர்விலோ அந்த உடலுறுப்புகளை உடனே சுத்தம் செய்து கொள்ளலாம்! மற்றபடி பெரும்பாலான இடங்களில் இன்றுவரை இதுதான் நிலை!யூரின் போன பிறகும் அந்த உறுப்புகளை அப்படியே விட்டுவிட்டால் யூரின் மூலம் வெளியாகும் உப்பு படிந்து, அந்த உறுப்புகளின் மென்மையான தசைகளில் நமைச்சல் ஏற்படும்! அப்படி அரிப்பெடுக்கும்போது அங்கே தொற்றும் வர வழி ஏற்படுகிறது.பிற்காலத்தில் குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு பெண்ணின் கருப்பை வாசலான பிறப்புறுப்புகள் சுத்தமின்றி இருந்துவிட்டால், அது, பிறகு குழந்தைப் பிறப்பையும், அந்தக் குழந்தையின் ஆரோக்கியத்தையும் சேர்த்துக் கெடுக்கும்! அதுமட்டுமல்ல... இவளது உடலே ஒருவித துர்நாற்றத்துடன் மாற வாய்ப்பிருக்கிறது. இது பிற்காலத்தில் இவளது திருமண வாழ்க்கையையும் பாதிக்கும்! அதனால் அடிப்படை விஷயமான பர்சனல் ஹைஜீன் குறித்து வளர் இளம் பெண்கள் தெளிவுடன் இருக்க வேண்டியதாக இருக்கிறது.கிராமங்களில் மட்டுமல்ல... நகரங்களிலேயேகூட சில டீன்ஏஜர்களிடம் இந்த அறியாமை அதிகம் இருக்கிறது. குறிப்பாக ``குளிக்கும்போது மறைவிடங்களை சோப் போட்டு நன்றாகத் தேய்த்துக் கழுவுவீர்களா?'' என்று கேட்டபோது,``ச்சீச்சீ! போங்க மேடம்! நாங்க அங்கெல்லாம் கையே வைக்க மாட்டோம்! தேய்ச்சுக் குளிக்கிறதாவது?'' என்று வெட்கப்படுகிறார்கள்!``இதெல்லாம் அசிங்கம்.. இதைத் தொடாதே!'' என்று சிறு குழந்தையாக இருந்தபோது பெற்றோர் சொல்லிக் கொடுத்த விஷயங்கள் பத்துப் பன்னிரண்டு வயதில் திடீரென்று எப்படி மாறும்?வெறுமனே `அசிங்கம்' என்று சொல்லிவிட்டு அவற்றைப் பற்றி பேசாமலேயே இருப்பதைவிட, `கண், காது, மூக்கு போல மறைவிடங்களும் நம் உடலின் முக்கியமான உறுப்புகள், அவற்றை எப்போதும் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்!' என்று வளர வளர குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது பெற்றோரின் முக்கியமான கடமைகளில் ஒன்று!பெண் குழந்தைகள் மட்டுமல்ல... இந்த விஷயத்தில் ஆண் குழந்தைகளும் கூட பர்சனல் சுத்தத்தில் மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கிறார்கள். (அதுபற்றி விரிவாக பிறகு பார்ப்போம்)நம் உடலின் உறுப்புகள் என்னென்ன? அவை நம் உடல்நலத்தோடு எந்த வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறது? பெண்களுக்கு உடல்ரீதியாக என்னென்ன வயதில் எந்தெந்த மாற்றங்கள் ஏற்படும்?பீரியட்ஸ் உருவாகும் முறை... தவிர அந்தச் சமயத்தில் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும்? நாப்கின் அல்லது அங்கே வைக்கும் துணியை எப்படிப் பொருத்த வேண்டும்? எவ்வளவு நேரம் ஒரு துணியை வைக்க வேண்டும்? என்று, அடிப்படை விஷயங்கள் பற்றி குழந்தைகளுக்கு அவை புரிந்துகொள்ள ஆரம்பிக்கும் வயது முதலே (அதிலும் இப்போதெல்லாம் ஓவர் போஷாக்கில் ஒன்பது, பத்து வயதுகளிலேயே `பெரியவளாகி' விடுகிறார்களே!) பெற்றோர்கள் மெதுமெதுவாகச் சொல்லி வைத்தால்தான் சிறுமிகள் அது போன்ற சூழல் வரும்போது, சுகாதாரத்துடனும், பதட்டம் இன்றியும் சமாளிக்கும் மனநிலை பெறுவார்கள்.

No comments:

Post a Comment