Shahul Blog

Search This Blog

Sunday, January 18, 2009

காணும் பொங்கலா குப்பை பொங்கலா ?

காணும் பொங்கலா குப்பை பொங்கலா ?

நேற்று மெரினாவில் வீசப்பட்ட 120 டன் குப்பைகள் இன்று அகற்றம். செய்தி கீழே... காணும் பொங்கல் தினமான நேற்று மட்டும் சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 4 லட்சம் பேர் கூடினார்கள். கடற்கரையில் அவர்கள் கொண்டுவந்த உணவையும், அங்கு கடையில் விற்கப்பட்ட உணவு வகைகளை வாங்கியும் சாப்பிட்டு, குடும்பத்துடன் குதூகலித்தனர். பின்னர், சாப்பாடு பொருட்கள் எடுத்துவந்த பாத்திரங்கள் தவிர ஏனைய குப்பைகளை கடற்கரையில் வீசிச்சென்றனர். இதனால், இன்று காலை சென்னை மெரினா கடற்கரை பிளாஸ்டிக் கப், பேப்பர் கப், குடிநீர் பாட்டில்கள், பாலீத்தின் கவர், இலை என குப்பைகளாக காட்சி அளித்தது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கடற்கரையின் ஒருமுனையில் இருந்து மற்றொரு பகுதிவரை குப்பை அள்ளும் வாகனமும் மூலமும், கைகளாலும் குப்பைகளை அகற்றினார்கள். வழக்கமாக சில டன்கள் குப்பைகள் மட்டுமே இருக்கும் மெரினா கடற்கரையில், இன்று மட்டும் 120 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இந்த குப்பைகள் அனைத்தும் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.1 டன் என்பது சுமார் 900 கிலோ

No comments:

Post a Comment