Shahul Blog

Search This Blog

Sunday, January 18, 2009

இணைய பெயரை எப்படி உபயோகிப்பது ?

இணைய பெயரை எப்படி உபயோகிப்பது ? -1
வாசகர்களே நேற்று இணைய பெயர் எங்கே பதிவு செய்வது பற்றி தெரிந்துகொண்டோம் .நண்பர் அறிவழி நான் எழுதிய பதிவை படித்து அவர் தன்னக்கென இணைய பெயர் (Godaddy) யில் தன்னுடைய பெயரை பதிவு செய்தார்.அவர் குறைந்தது (10-15) நிமிடங்கள் செலவிட்டிருப்பார், கடன் அட்டை இருந்ததால் வேலையை உடனடியாக முடித்துவிட்டு என்னை (Google டாக் யில் ) அழைத்து நான் பதிவு செய்துவிட்டேன் ஆனால் என்னுடைய இணைய பெயரை திறந்தால் ஏதோ ஒரு பக்கத்தை காட்டுகிறது என்றார், மேலும் arivili.com என்னுடைய வலைப்பூவை திறக்க வேண்டும் என்றார்.நீங்கள் உங்கள் இணைய பெயரை பிளாக்கர் வழியாக பதிவு செய்யாமல் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அமைப்புகளை உங்கள் இணைய பெயர் பதிவாளரிடம் செய்ய வேண்டும் .சாதரணமாக இணைய பதிவாளர்கள் (name server) என்று சொல்லப்படும் ஒரு தேர்வை மட்டும் கொடுப்பார்கள் அவர்களிடம் இணைய பெயர் விலை குறைவாக கூட இருக்கலாம் ஏன் என்றால் ஒரு சில வசதிகள் இல்லை .நீங்கள் Godaddy அல்லது வேறு பெரிய நிறுவனத்திடம் பதிவு செய்திருந்தால் அவர்கள் உங்களுக்கென இணையபெயர்க்கு தேவையான அனைத்து வசதிகள் இருக்கும்.உங்கள் இணைய பதிவாளர் (Godaddy) கணக்கில் சென்று பாருங்கள் அங்கே இரண்டு தேர்வுகள் இருக்கும்.1. Name Server2. Managed DNS (or) DNS control and MX controlஇங்கே நமக்கு தேவையானது (DNS control) உங்களிடம் DNS control இல்லை என்றால் உங்கள் பதிவாளரை அணுகி கேள்வியை கேளுங்கள் .நீங்கள் Godaddy யில் பதிவு செய்து இருந்தால் கண்டிப்பாக இந்த தேர்வு இருக்கும்உங்கள் கணக்கில் சென்று உங்கள் இணைய பெயரை திறந்தால் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு கட்டுப்பாடு இருக்க வேண்டும்அதில் Name Server என்று ஒன்று இருக்கும் அதில் நீங்கள் எதவும் செய்ய வேண்டாம் Godaddy உங்களுக்கென அவர்களே (nameserver) அமைப்புகளும் செய்து வைத்திருப்பார்கள்.அதற்க்கு கீழே Forwarding மற்றும் DNS control என்று இருக்கும் அதில் இரண்டிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும்Forwarding தேர்ந்தெடுத்து உங்கள் இணைய பெயர் (எ .டு .கா ) http://www.arivili.com என்று மாற்றி சேமித்து விடுங்கள் .பிறகு DNS control சென்று அதில் CNAME என்ற களத்தில் www என்று ஒரு களம் இருக்கும் அதில் (ghs.google.com) என்று மாற்றி விட்டு சேமித்தால் போதும்.பிறகு உங்கள் பிளாக்கர் சென்று settings --> tab இல் --> Publishing தேர்ந்தெடுங்கள்.அதில் custom domain தேர்வு செய்தபின் அடுத்த பக்கத்தில் பிளாக்கர் புதிய பெயர் வேண்டுமா என்று கேட்கும் அதற்க்கு அருகில் (Switch to advanced settings) தேர்ந்தெடுங்கள்.பிறகு advanced settings ல் உங்கள் இணைய பெயரை (எ .டு .கா ) http://www.arivili.com என்று மாற்றி சேமித்து விடுங்கள் .இப்பொழுது உங்கள் வலைப்பூ புதிய பெயருடன் வலம் வரும்.குறிப்பு : நீங்கள் மாற்றம் செய்த அனைத்தும் 24-48 மணிநேரத்துக்குள் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

No comments:

Post a Comment