Shahul Blog

Search This Blog

Sunday, January 18, 2009

குண்டக்க மண்டக்க !!

குண்டக்க மண்டக்க – 9
பஸ்சு புஸ்சா போச்சு !'23C' பஸ்ல போறவங்க கையில் ஆக்ஸிஜன் வச்சிகிட்ட தான் போனும். நிக்க இடம் இல்லாம மூச்சு தெனரி பல பேர் வேலைக்கும், காலேஜ்க்கும் போய்ட்டு வரறாங்க ! அயினாவரத்துல இருந்து பெஸன்ட் நகர் வரைக்கும் போற பஸ்ல இரண்டு பேர் தான் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஒக்காந்து வருவாங்க. வேற யாரு ! டைவரும், கண்டக்டரும் தான். டிரைவர் எழுந்திருச்சு வண்டிய ஒட்டுன எல்லார் கதையும் கந்தலைட்டும். அவர் ஒக்காந்து ஒட்டுற வரைக்கும் தான் மத்தவங்களுக்கு நிம்மதி. ஆனா ! கண்டக்டர் எந்திருச்சு வந்து டிக்கெட் கொடுத்தா தான் நாம ஒக்காந்திட்டு இருக்குற இடம் நமக்கு சொந்தம். டிக்கெட் வாங்க எழுந்திருச்சா... அவ்வளவு தான். இடம் போச்சு ! நம்ம கண்டகர் வடிவேலு அண்ணே எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இருந்த இடத்துல இருந்து தான் டிக்கெட் கொடுப்பாரு. அவர் இடத்த விட்டு அசைய மாட்டாரு. அப்படிப்பட்ட '23C' பஸ்ல நம்ப பார்த்திபன் 'என்ட்ரி கொடுத்தா... எப்படி இருக்கும் ?வடிவேலு : ( விசிலை பலமாய் ஊதி விட்டு ) ஆ... ஏறு... ஏறு.. வண்டி கிலம்ப போவுது... சிக்கிரம்..! (சற்று நேரம் கலித்து ) போலாம் ரைட்...!அயினாவரத்தில் இருந்து கெல்லிஸ் தாண்டி புரசைவாக்கம் போகும் போது பத்து கல்லூரி மாணவர்கள் ஒன்றாய் ஏறினார்கள்.ஒரு மாணவன் : மச்சான்... நம்ப பசங்க எல்லாரும் பஸ்ல ஏறிடாங்களா...?இன்னொரு மாணவன் : ம்ம்.. எல்லாரும் ஏறியாச்சி மச்சி...ஒரு மாணவன் : அப்படியா... வா மறுபடி இறங்குவோம்பஸ்சில் ஏறிய பத்து மாணவர்களும் ஒன்றாய் இறங்கினர்.வடிவேலு : டாய்.. ஒண்ணு பஸ்ல ஏறு... இல்ல இறங்கு... என்ன சின்ன புள்ள தனமா ஏறி இறங்கி விளையாடுறது..எல்லா மாணவர்களும் கோரஸாக " ரொம்ப திட்டாதீங்க.... வலிக்குது... அழுதிடுவேன்.."வடிவேலு : (மெதுவாக ) நம்ப பிட்ட எல்லா பசங்களும் ஓட்டுறாங்க... (ஊரக்க குரலில்) போலாம் ரைட்...!அடுத்த ஸ்டாப்பிங்கில்வடிவேலு : யாரும் புட் போட்டுல நிக்க கூடாது... சிக்கிரம் ஏறுங்க..அப்போது பஸ் கீழ் இருந்த பார்த்திபன் கண்டக்டர் சீட்டில் இருந்த வடிவேலுவின் சட்டையை பிடித்து, முறுக்கு புட் போட்டில் கால் படாமல் அதன் கை பிடி மீது கால் வைத்து உள்ளே நுழைகிறார். பார்த்திபன் வடிவேலுவின் சட்டையை பிடிக்கும் போது உயிர் போகும் அளவிக் கத்தினான்.வடிவேலு : (பார்த்திபன் முகத்தை பார்க்காமல்) டாய்...! படிக்கட்டு வழியா வர வேண்டியது தானே... ஏன்டா என் சட்டைய புடிச்சு ஏறி வந்த...?பார்த்திபன் : நீங்க தான் புட் போட்டுல நீக்க கூடாது...! புட் போட்டுல நீக்கமா எப்படி ஏறி வரது...!வடிவேலு : அவனா நீ...! (மனதுக்குள் ) மறுபடியும் வந்துட்டானே... என் உசுரு என் கையில இல்லனு தெரிஞ்சு போச்சு. ஜாக்கிரதையா பேசனும்.பார்த்திபன் : அண்ணா சாலை போறதுக்கு ஒரு டிக்கெட் வேண்டும்... எவ்வளவு..?வடிவேலு : அண்ணா சாலைக்கு அஞ்சு ரூபா..!பார்த்திபன் : என்னது ! அண்ணா சாலை அஞ்சு ரூபாவா...? அப்போ LIC பில்டிங் விலை எவ்வளவு...வடிவேலு : ( மனதுக்குள் ) ஆரம்பிச்சிட்டானே... ! என் வேலை போய்டும் போலிருக்கே... (பார்த்திபனிடம்) அண்ணா சாலைக்கு போறத்துக்கு அஞ்சு ரூபா.. போதுமா.பார்த்திபன் : அப்படி சொல்லி டிக்கெட் கொடு..வடிவேலு : ( முனு முனுத்தப்படி ) எல்ல்லா கண்டக்டரும் இப்படி சொல்லி தான் டிக்கெட் கொடுக்குறாங்க... இவன் மட்டும் என்ன ரொம்ப படுத்துறானே.. பேசாம டிக்கெட் கொடுக்குற சாக்குல இந்த இடத்த விட்டு போவோம்.இது வரை தன் இடத்தை விட்டு டிக்கெட் கொடுக்காத வடிவேலு முதல் முறையாக பார்த்திபனுக்கு பயந்து தன் இதைத்தை விட்டு முன் பக்கத்தில் இருப்பவர்களுக்கு டிக்கெட் கொடுக்கிறான்.பார்த்திபன் : ஆமா...! கையில இவ்வளவு டிக்கெட் வச்சிக்கிட்டு நீ ஏன் டிக்கெட் கேக்குற...?வடிவேலு : உனக்கு புன்னியமா போவும்... இன்னைக்கு ஒரு நாள் என்ன விட்டுடேன்...பார்த்திபன் : சரி ! போனா போது போலச்சி போ... - என்று சொல்லி பார்த்திபன் மீண்டும் பின் பக்கம் வந்தான்வடிவேலு : (மனதுக்குள்) அப்பாடா... இன்னைக்கு ஒழுங்க வீடு போலாம்...வடிவேலு : டிக்கெட்... டிக்கெட்...டிக்கெட்ஒருவர் : பெஸன்ட் நகர் இரண்டு தாங்க...- என்று கூறி நூறு ரூபாய் நீட்ட..வடிவேலு : சரியான சில்லரை கொடுப்பா...ஒருவர் : ஸாரிங்க... சில்லரை இல்ல...வடிவேலு : சில்லரை இல்லாம ஏன் வண்டியில ஏறுன... இறங்கு....அடுத்த ஸ்டாப்பில் அந்த நபர் கீழே இறங்கினார். இதே போல் சரியான சில்லரை இல்லாததால் மேலும் இரண்டு பேர் பஸ்சில் இருந்து இறங்கினர். இச்சமயத்தில் ஒரு ரிப்போட்டர் அந்த பஸ்சில் ஏற...ரிப்போட்டர் : ஒரு மலாப்பூர் கொடுப்பா...வடிவேலு : இரண்டு ரூபா டிக்கெட்டுக்கு... நூறு ரூபா கொடுக்குற... சில்லரை இல்லானா இறங்கு,,,ரிப்போட்டர் : என்ன புது ரூல்சா இருக்கு..! உனக்கு தேவ பணம். ஒழுங்கா டிக்கெட் கொடு...வடிவேலு : ஸரி ! நூறு ரூபா கொடு... சில்லரைய பெஸன்ட் நகர்ல வந்து தரேன்...ரிப்போட்டர் : என்ன அடவடி தனமா பேசுற... உன்ன பத்தி பத்திரிக்கையில எழுதி நாரடிச்சிடுவேன்.அதுவரை அமைதியாய் இருந்த பார்த்திபன் இந்த பிரச்சனையில் மூக்கை நுழைத்தான். வேறு எதற்கு ! இன்னும் குட்டையை குழப்புவதற்கு தான்.பார்த்திபன் : (ரிப்போட்டரிடம்) ஹேலோ பாஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க...வடிவேலு : (முனு முனுப்புடன் ) இவன் எதுக்கு மறுபடியும் வந்தான்... என்ன பண்ண போறானோ...பார்த்திபன் : (வடிவேலுவிடம்) இன்னும் எத்தன பேர சில்லரை இல்லாம பஸ்ச விட்டு இறங்க சொல்லுவ... பேசாம ஒண்ணு பண்ணு... யாருக்கும் சில்லரை கொடுக்க முடியாத நீ வண்டிய விட்டு இறங்கு...வடிவேலு : நா எதுக்கு...?பார்த்திபன் : நீ தான் சொன்ன... சரியான சில்லரை இல்லனா வண்டிய விட்டு இறங்கு... உன் கிட்ட சில்லரை இல்ல. அப்போ இறங்கு...வடிவேலு : வேண்டாம்... ரொம்ப கஷ்டப்படுவ...பார்த்திபன் : யாரு...?வடிவேலு : வேற யாரு... நான் தான்...பார்த்திபனும், ரிப்போட்டரும் வடிவேலுவை பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு சென்றனர்.சில்லரை இல்லனு பஸ்ச விட்டு கண்டக்டர் இறக்குனது இது முதல் தடவை. வேலை செய்யும் போது பாதி வழியில் சொந்த விஷயமாக பஸ்சில் இருந்து இறங்கியதால் வடிவேலுவுக்கு கண்டக்டர் வேலை போனது. இப்போது வடிவேலு சில்லரைக்கே திண்டாடிக் கொண்டு இருக்கிறார்.

No comments:

Post a Comment