Shahul Blog

Search This Blog

Sunday, January 18, 2009

ஜல்லிக்கட்டு: காட்டுமிராண்டிதனமும், ‘The Lottery’ சிறுகதையும்.

ஜல்லிக்கட்டு: காட்டுமிராண்டிதனமும், ‘The Lottery’ சிறுகதையும்.

ஒரு முறை, பூமியில் வாழ்ந்த மக்கள் பஞ்சத்தில் அவதிபட, அந்த பஞ்சத்தில் இருந்து அவர்கள் தப்பிக்க வேண்டுமானால், ’தினமும் மூன்று வேளை குளித்து, ஒரு வேளை சாப்பிட சொல்’ என சிவபெருமான், நந்தியிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார். ஆனால், பூமிக்கு வந்த நந்தியோ மக்களிடம் மறந்துப்போய் அதை மாற்றி சொல்லிவிட்டது. அதாவது, ‘ஒரு வேளை குளியல், மூன்று வேளை சாப்பாடு’ என! கோபம் கொண்ட சிவபெருமான், நீ செய்த தவறுக்காக இனி மக்களுக்காவே போய் உழை, உதவு என நந்தியை பூமிக்கு அனுப்பிவிட்டார்.அப்படி அனுப்பிய நந்தியை ஒவ்வொரு பொங்கலுக்கும் வந்து சிவன் பார்ப்பது தான் ‘மாட்டு பொங்கல்’. என எங்கள் ஊரில் மாட்டு பொங்கலுக்கு விளக்கம் கூறுவார்கள்.

எது எப்படியோ, நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம், சிவன் வந்தால் என்ன போனால் என்ன. இந்த நன்றி உண்ர்ச்சி கண்டு மாடுகள் தமக்குள்,‘ நாயை விட நன்றியுள்ளவன் மனிதன்’ என்று தான் நினைத்துக்கொள்ளும். ஆனால் அது அப்படி நினைத்து முடிப்பதற்க்குள், ‘ஜல்லிக்கட்டு’ என்னும் போட்டியை வைத்து தன் வேலையை காட்ட துவங்கிவிடுகிறான், மனிதன்.

ஜல்லிகட்டு வீர விளையாட்டாம்! ஒவ்வொரு முறையும் பேப்பரில் 4 பேர் சாவு, 5 பேர் சாவு என்ற செய்தியை படிக்கும் பொழுது. இதில் என்ன வீரம் இருக்கிறது என்று தான் எண்ணத் தோன்றுகிறது. இவர்கள் கிரிக்கெட் விளையாடுபவர்களையும் ’வீரர்’ என்று தான் கூறுகிறார்கள்; ராணுவத்தில் இருப்பவரையும் ‘வீரர்’ என்று தான் கூறுகிறார்கள்? என்னுடைய கேள்வி உண்மையாகவே மிரளும் மாட்டை பிடிப்பது ஒரு வீராமா?

இங்கு இழக்கும் உயிரை, ஒரு தீவிரவாதியுடன் போரடி இழந்தாலும் பரவாயில்லை; அல்லது அங்கு மாடுகளுடன் போரடுவதற்க்கு பதில் ஒரு ‘இரட்டை தம்ளருக்காக’ போராடினாலும் பரவயில்லை. இதையெல்லாம் வீரம் எனலாம், வாயில்லா மாடு, கூட்டத்தை பார்த்து மிரளுகிறது அதை அடக்குகிறார்களாம்! அது வீர விளையாட்டாம்! என்ன கொடுமை சார் இது?
ஆளும் வர்கம், மேடையில் அமர்ந்து களிக்க உழக்கும் வர்க்கம் தன் உயிரைக் கொடுப்பது தான் இந்த விளையாட்டின் உட்கரு.இதை வீரம் என்றும், பரிசு என்று பாட்டாள் வர்கம் தன் உயிரை கொடுத்துக்கொண்டிருக்க, ஆளும் வர்கம் அதற்க்கு சந்தோஷமாக தலையசைத்துக் கொண்டிருக்கிறது.

இதில் இன்னொரு கொடுமை பாதுக்காப்பாக இதை நடத்துவார்களாம்?, எப்படி உயிர் போவதற்க்கு பாதுகப்பு , உலக வரலாற்றிலேய இங்கு தான் கிடைக்கும்.
அவர்கள் கூறும் இன்னொறு விஷயம் மரபு, கலச்சாரம், பழசை விட்டுவிட கூடாது, மக்களின் செண்டிமெண்ட்.
இதை கேட்க்கும் பொழுது எனக்கு நீண்ட நாள் முன் படித்த ஷெர்லி ஜாக்சனின் ’த லாட்டரி’ சிறுகதை தான் நினைவுக்கு வருகிறது.அந்த கதை..
ஒரு கோடைக் காலம், பள்ளிகள் விடுமுறையில் உள்ள ஒரு நாளில் ஊர் கூடுகிறது.அது ‘லாட்டரி நாள்’. வருடத்திற்க்கு ஒரு முறை இந்த நாளை கடைபிடிக்கிறார்கள்.

மக்கள் ஒவ்வொரு குடும்பமாக, கதைகள் பேசியவாரு ஊரின் மத்தியில் கூடுகிறார்கள்.பலரின் மனதில் இருக்கும் கேள்வி இந்த ‘லாட்டரி நாள்’ அவசியம் தானா?

அவசியமில்லை தான், இது எல்லோருக்கும் தெரியும் ஆனால் மரபு? தம் முன்னோர்கள் கடைபிடித்த வழக்கமாயிற்றே, விட்டுவிடவும் பயமாக இருந்தது. இன்னும் தங்கள் குழந்தைகளும், இதை கடைபிடிக்க வேண்டும் என்பதும் அவர்கள் ஆசையாக இருந்தது.

அதற்க்குள் அங்கு ஊர் பெரியவர் ஒரு கறுப்பு நிற, பழைய காலத்து பெட்டியுடன் நுழந்தார்.அந்த பெட்டியை நடுவில் உள்ள ஒரு முக்காளி மீது வைக்க சிலர் உதவினார்கள்.
ஒவ்வொரு முறை லாட்டரி முடியும் பொழுதும் புது பெட்டியின் அவசியத்தை பற்றி அவர் பேசுவதும், மக்கள் பழதை மாற்ற கூடாது, என்ற செண்டிமெண்டை முன் வைப்பதுமாக ஆண்டுகள் ஓடிக்கோண்டிருந்தன.

பொதுவாக மற்ற ஊர்களில், லாட்டரி ஒரு நாள் முழுவதும் கூட நடக்கும் ஆனால், இந்த ஊரிலோ வெறும் 100 பேர் என்பதால் காலை 10 மணிக்கு ஆரம்பித்து, லட்டரியை முடித்துவிட்டு சீக்கிரமாகவே வீட்டிற்க்கு திரும்பிவிடலாம்.

ம், என்று ஊர் பெரியவர் சொன்னதும். ஒவ்வொருவராக வந்து, அந்த கறுப்பு பெட்டியில் இருந்த மடிக்கப்பட்ட துண்டு தாள்களை எடுத்தனார்.

ஒவ்வொருவராக பிரித்து பார்க்க அனைவரின் தாளுமே வெண்மையாகவும் காலியாகவும் இருந்தது.

யாருக்கு விழுந்துள்ளது, லாட்டரி யாருக்கு விழந்துள்ளது என ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ள.. கடைசியாக அங்கிருந்த ஒரு பெண்மணியின் தாளில் ஒரு கரும் புள்ளி, அவளுக்கு தான் அந்த வருட லாட்டரி.

ஊர் பெரியவர், ம், சீக்கிரமாக முடியுங்கள் , நேரமகிறது, வீட்டிற்க்கு செல்ல வேண்டும் என அவசர படுத்தினார்.

லட்டரி விழந்த பெண் நடுவில் அழுதபடி நிற்க, ஊர் மக்கள் ஒவ்வொருவரும் கையில் கல்லை எடுத்து அவளை அடிக்க தொடங்கினார்….

நாம் பழைய மரபுகள், கலச்சாரம் என்கிற பெயரில் நம் அடுத்த சமுதாயதிற்க்கு என்னவெடுத்து செல்கிறாம்? ரத்தம், உயிரை பறிக்கும் மூட வழக்கங்களையா?

வீரம் என்பதற்க்கான அர்த்தம் உண்மையாக புரிதல் வேண்டும். நம் மனடை அடக்கி, அங்கும் இங்கும் மிரளாமல், கெட்டதை எதிர்த்து, போராடி, நம்மை நாம் வெல்வதே வீரம். அப்பாவி மாடுகளை துன்புறுத்துவதும், கொல்வதும், அதில் மரணமடைவதிலும் இல்லை வீரம்.

இனி வரும் சமுதாயத்திற்க்கும் மாடுகளுக்கும் ஒரு நல்ல உற்ச்சாகமான, உயிரிழப்புகள் இல்லாத பொங்கலை பரிசாக தருவோம்.

No comments:

Post a Comment