Shahul Blog

Search This Blog

Monday, February 01, 2010

வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாழ்க்கை

வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாழ்க்கை

பதிவர்கள் அனைவருக்கும் என் காலை வணக்கம்.

இந்த புதிய ஆண்டில் எனது முதல் பதிப்பு

வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாழ்க்கை - இதுவே தலைப்பு

தமிழர்கள் எல்லா நாட்டிலும் வாழ்கிறார்கள் வேலை செய்கிறார்கள்,இதில் எத்தனை பேர் தங்கள் படித்த / தங்களுக்கு பிடித்த வேலை செய்கிறார்கள் ? உங்களுக்கு தெரியுமா?

இங்கு சவுதி அரேபியா-வில் பல தமிழர்கள் வேலை செய்கிறார்கள்,பலர் தங்களுக்கு பிடிக்காத / தெரியாத வேலை செய்கிறார்கள். பின் வரும் சம்பவம் என் நண்பனுக்கு ஏற்பட்டது.

என் நண்பன் பட்டுகோட்டையை சேர்த்தவன், தற்போது ரியாதில் வேலை செய்கிறான், ஹைதராபாத்தை சேர்த்த நிறுவனம் நண்பனுக்கு விசா,டிக்கெட் வழங்கியது.

கடந்த வருடம் இங்கே வந்த பின் அவனது எதிர்காலம் கேள்விகுறி ஆனது!

இங்கே வந்த பின் அவனது கம்பெனி பாஸ்போர்ட், மற்றும் பல முக்கிய டாகுமென்ட்ய் வைத்து கொண்டது, அவன் அட்டென்ட் பண்ணிய தேர்வு கம்ப்யூட்டர் டேச்னிசியன்,ஆனால் தற்போது அவனுது கம்பெனி கொடுத்த பணி காபினெட் சலேச்மன்.

Sunday, January 17, 2010

 என் பெயர் சாகுல் ஹமீது ,

நான் சவுதி அரேபியா (ரியாத்) வசிக்கும் தமிழன் , உங்கள் அனைவரையும் நான் அன்புடன் என் வலை பதிவுக்கு வரவேற்கிறேன்.

நன்றி
.
இப்படிக்கு,

சாகுல் ஹமீது,
ரியாத்

Sunday, January 18, 2009

மொபைல் போன் தொலைந்து போனால் !!

மொபைல் போன் தொலைந்து போனால்….


மொபைல் போன் தொலைந்து போவதால் உள்ள ஒரே நன்மை என்னவென்றால்ஏண்டா மச்சான் போனே பண்ணலன்னு யாராச்சும் கேட்டால் மொபைல் தொலைஞ்சுபோய் நம்பர் காணாமா போச்சுடா மாப்ளன்னு சொல்லலாம். கடன்காரன், ஊர்க்காரன்தூரத்து சொந்தம், தினமும் ஆபிஸ்லருந்து ஓசி போனில் ஒயிலாக பேசும் ஊழியர்கள்இடமிருந்து கூட உபரியாக தப்பிக்கலாம்.
கடந்த வாரத்தில் ஒருநாள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது என் தலையணைக்கடியில்இருந்த மொபைலை என் தூக்கம் கலையாமல் லவட்டிவிட்டார்கள். நான் கதவைப்பூட்டாமல் தூங்கியதை எந்த உளவுத்துறையினர் அக்கொள்ளையர்களுக்கு தகவல்கொடுத்தார்களோ தெரியவில்லை. விலைமதிப்புமிக்க பாவனா, நமீதா, இன்னபிறதிரை அழகிகளின் புகைப்படங்கள் தவறிவிட்டன. இளையராஜா பாடல்களும்நானே பாடி பதிவு செய்த பாடல்களும் பொக்கிஷம் போல யாருக்கும் தெரியாமல்பாதுகாத்து வைத்திருந்தேன் அத்தனையும் புஸ்.
காவல் நிலையத்தில் புகார் செய்ய போனபோது அங்கொரு கொடுமை சிங்கில் பீஸில்ஆடியது. அங்கே இருந்த ஒரு போலீசுக்கு மருந்துகுப்பி அளவு கூட ஆங்கிலம் தெரியவில்லை. எனக்கோ கட்டிப்போட்டு அடித்தால்கூட அரபி வராது. அக்கம்பக்கத்தில் வார்த்தைகளை கடன் வாங்கி கூடவே சைகை நடனம் ஆடி அவர்களுக்குபுரியவைத்தேன். போன் வாங்கியதற்கான ரசீது, சீரியல் எண், அடையாள அட்டைஎல்லாவற்றையும் கொடுக்க சொன்னார்கள். எதுவுமே இல்லாமல் வந்திருந்த எனக்குபேரதிர்ச்சி உடனே அறைக்குச் சென்று எடுத்து வருகிறேன் என்று வெளியே வந்தேன்.
என் நேரம் ஒரு டாக்சி கூட கிடைக்கவில்லை. மெதுவாக நடந்து செல்லும்போதுஆப்பிரிக்கன் ஈஸ்டர்ன் தென்பட்டது. உள்ளே நுழைந்து இரண்டு புட்டிகள் வாங்கிதொலைந்துபோனதை கொண்டாடிவிடலாம் என்று மனம் கணக்கு போட்ட நொடியில்ஆவோ பாய் என்ற எனக்கு தெரிந்த இந்தி வார்த்தையில் ஒரு பாகிஸ்தானி டாக்சிகாரன்அழைத்தான். போய் திரும்ப அழைத்து வர அவனுடன் இந்தியில் கதைத்து (ஆம் இந்தி)அறை வந்தபோது ரசீது எங்கு வைத்தேன் என்பது மறந்துபோனது. கட்டிலையே புரட்டிஅடியில் இருந்த பேப்பரை எடுத்தால் ரசீதாக இருந்தது. மொபைலே கிடைத்த சந்தோஷம்சீரியல் எண்ணும் அதிலேயே எழுதி இருந்தது.
மறுபடியும் அதே போலிஸ் ஸ்டேஷன். அவர்கள் கொடுத்த பாரத்தில் விடைகளைநிரப்ப சொன்னார்கள். பேனா எடுத்து வரவில்லை. சூன்யமான முகத்துடன் அந்ததாடி போலிசை பார்த்தேன். நம் ஊர்களிலாவது ஒருமீட்டர் செருப்பு தைக்கும் நூலில்பேனாவை இறுக்கமாக கட்டி வைத்திருப்பார்கள். இங்கே அதுவும் இல்லை. பக்கத்தில்நின்றிருந்த ஒரு சூடானியரிடம் கெஞ்சி வாங்கி நிரப்பி ரசீதின் நகல், அடையாள அட்டை நகல், எல்லாவற்றையும் இணைத்து கொடுத்தேன்.
இவ்வளவு சிரமத்துக்கு இடையில் கொடுத்தபோது அதை இடக்கையால் வாங்கி பிரித்துகூட பார்க்காமல் ஓரமாக வைத்துவிட்டார் அந்த கனவான் இப்படியாகும் என்று தெரிந்துஇருந்தால் நானே புலனாய்வில் இறங்கி திருடனுக்கு வலை விரித்திருப்பேன். வெளியேவந்து காவல் நிலையத்திற்கு பின்னால் இருந்த ஆப்பிரிக்கன் ஈஸ்டர்ன் கிளையினுள்நுழையப்போனேன். அப்போதுதான் வேலை நேரம் முடிந்து கதவை அடைத்தார்கள்.“ஐயா கருணையாக ஐந்து நிமிடத்தை தாருங்கள்” என்று என்று ஏலம் விட்டு படிப்படியாகநான்கு, மூன்று, இரண்டு என்று கடைசியாக ஒருநிமிடம் கூட திறக்க முடியாது என்றுசொல்லி கதவை அடைத்து விட்டார் அந்த கறார் ஊழியர்.
தொலைந்து போனது கிடைக்கும் வரை தற்காலிகமாவது ஒரு சிம்கார்டு இருந்தால்நல்லது என்று அதை வாங்க சென்றேன். அந்த மெகாமாலில் இதுவரை ஆங்கிலத்தில்வந்திராத ஆங்கிலப் படங்கள் எல்லாம் விலைக்கு இருந்தன. அய்யா இது எல்லாம்எந்த நூற்றாண்டில் வெளிவந்த படங்கள் என்று கேட்கலாம் போல இருந்தது. இந்த பிலிப்பைன் தேசத்து பிகர்கள் பணம் எண்ணி கல்லாபெட்டியில் போடுவதற்கும்,தொலைபேசிக்கு பதில் சொல்லவும் மட்டும் பிறந்தவர்களா என்ற சந்தேகம் அடிக்கடிஎனக்கு ஏற்படுவதுண்டு. கல்லாக்களில் நீக்கமற வெள்ளை நிற பிலிப்பினி பிகர்கள்பொம்மைகள் போல அமர்ந்திருந்தன.
வயிறு பசித்தது. எங்காவது காரமாக உள்ளே தள்ளவேண்டும் போல இருந்தது. நேராகதென்னிந்திய உணவு விடுதி நோக்கி சென்றேன். “இப்பதான் ரெடியாகிட்டு இருக்குங்க”இட்லி தோசை வேணா சூடா கிடைக்கும் என்றார்கள். சரி எதாச்சும் கொடு என்றேன்.போனில் பேசியபடியே ஒருவன் என் அருகில் உட்கார்ந்தான். புதிதாக வந்தவன் போலஊருக்கு போன் பண்ணி பிஸ்து காமித்துக் கொண்டிருந்தான் நடு நடுவே “ஆமா…இல்லயா பின்ன..” என்று வேறு இந்தநேரத்தில் என் கையில் டுபாக்கி இருந்தால்ரோட்டில் போன் பேசி செல்லும் அனைவர் வாயிலும் குறிபார்த்து சுடுவேன்.
போனை ஒரு வினாடி நிறுத்திவிட்டு “அண்ணே எனக்கு ஒரு ஆவூ” என்றான் அந்தஅண்ணாரும் “ஒண்ணே ஒன்னு போதுமா கண்ணு” என்று திருப்பி கேட்டார். இவன்சைகையாலே பதில் அளித்தான். (இல்லயா பின்ன IST லைன் இல்லா) என்னால்ஆர்வத்தை அடக்க முடியவில்லை போன் பேசிக்கொண்டிருந்தவனிடம் “ஏங்க ஆவூ”என்றால் என்ன என்று கேட்டேன். ஆவூன்னா ஆனியன் ஊத்தாப்பம் என்ற தன் அரியசுருக்கு சொல்லை சொன்னார்.
“அப்ப சாதா வூத்தப்பத்த என்னன்னு சொல்விங்க? சாவூன்னா? என்று கேட்டேன். வேறுஇடம் பார்த்து உட்கார்ந்து கொண்டு ஆவூவை அவசரமாக சாப்பிட்டுவிட்டு வெளியேறினான்.
அறைக்கும் திரும்பும் வழியில் டாக்சியில் என் பக்கத்தில் இருந்தவர். என் மொபைல்மாடல் போலவே வைத்திருந்தார். (Sony ericson k800i) அப்படியே புடுங்கிகிட்டுகார்லருந்து குதிச்சிறலாமான்னு தோன்றியது. போனையே வெறித்து பார்க்க அவர்பேண்டின் உள்பாக்கெட்டில் போட்டு பத்திரப்படுத்திவிட்டார்.
கடந்த ஒருவாரமாக எண்களை மொபைல் போனில் சேமிக்காமல் மனதில் மனனம் செய்வது என்று முடிவுசெய்து சேமிக்காமல் விட்டுவிடுகிறேன். ஆனால் ஒன்றிரண்டுதவிர மனனம் ஆக மாட்டேன் என்கிறது. தூங்கும்போது நிறைய எண்கள் கனவில்வருகிறது, கார் நம்பர்கள் குறுக்கே வந்து குழப்பமளிக்கிறது, திடிரென்று என்டெலிபோன் எக்ஸ்டென்சன் மறந்து போனது, உச்சகட்டமாக புதிதாக வாங்கிய எண்என்னவென்று தெரியவில்லை. அலுவலக போனில் இருந்து 100 மைல் தள்ளிஇருந்த ஒருவருக்கு அழைத்து எண் உலாபேசி எண் என்னவென்று சொல்ல முடியுமா?என்று கேட்டேன்.
“அண்ணே என்னண்ணே ஆச்சு? கவலபடாதிங்க எல்லாம் சரியாயிரும்…” நம்பர்சொல்றேன் குறிச்சுக்கங்க என்று சொல்லி நம்பர் சொன்னார்.
சிறுவயதில் உறவுக்காரர்கள் வீட்டு டெலிபோன் எண் எல்லாம் டாண் டாண் என்றுசொல்வேன். மொபைல் வந்ததிலிருந்து மூளை என்ற வஸ்துவை உபயோகபடுத்தாமல்விட்டதினால் துருப்பிடித்து விட்டது.

‘ஃபிளிக்கர்’ இணையதளம் !!

மற்றவர்களுடைய டைரியை படித்துப்பார்ப்பது சுவாரசியமான விஷயம்தான். வாய்ப்பு கிடைத்தால், பலரும் செய்யத் துணியும் சங்கதிதான். மற்றவர்களுடைய புகைப்பட ஆல்பத்தை புரட்டிப்பார்ப்பதும் இதற்கு நிகரான சுவையான அனுபவமா என்பது தெரியவில்லை..டைரியைப் போல் அல்லாமல் தங்களுடைய புகைப்பட ஆல்பத்தை மற்றவர்களுக்கு காண்பிக்க எல்லோ ரும் தயாராகவே இருக்கின்றனர். அதிலும், திருமணம் ஆன வீடு களுக்கு செல்லும்போது, கல்யாண ஆல்பத்தை வந்தவர்களுக்கு காண்பிப்பது என்பது உபசரிப்பின் ஒரு அம்சமாகவே அமைந்து விடுகிறது.
இன்னும் சிலர் யார் வந்தாலும் தங்கள் வீட்டில் இருக்கும் ஆல்பத்தை மிகுந்த ஈடுபாட்டோடு கையில் கொடுத்து பார்க்க கட்டாயப்படுத்துவது உண்டு. நாகரீகம் கருதி அதையும் சம்பிரதாய மாக புரட்டி பார்ப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
எல்லா புகைப்படங்களுமே பார்த்து ரசிக்கத்தக்கவை என்று சொல்வதற் கில்லை. ஆனால் முன்பின் தெரியாத வர்களின் புகைப்பட ஆல்பத்தை தினந்தோறும் ஈடுபாட்டோடு பார்த்து ரசிப்பவர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
இன்டெர்நெட் இந்த புதிய பழக் கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இன்டெர்நெட் மூலம் புகைப்படங் களை பகிர்ந்து கொள்வதை சுலபமாக வும், பிரபலமாகவும், ஏன் தவிர்க்க இயலாததாகவும் ஆக்கியிருக்கும் ‘ஃபிளிக்கர்’ இணையதளம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
இந்த தளம் புகைப்படங்களை பார்த்து ரசிப்பதை மட்டுமல்லாமல், எட்டிப்பார்க்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாதவர்கள் தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதற்காக அரங்கேற்றியிருக்கும் குடும்ப புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருப்பது பலருக்கு பிடித்த மான செயலாக அமைந்திருக்கிறது.
ஒருவருடைய திருமண ஆல்பம், சுற்றுப்பயண புகைப்படங்கள் போன்ற வற்றையெல்லாம் மணிக்கணக்காக பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். இத்தகைய தீவிர ‘ஃபிளிக்கர்’ ரசிகர் களின் பழக்கத் துக்கு போட்டோ லர்க்கிங் என்று புதிதாக பெயரும் கொடுத்திருக்கின் றனர்.
மற்றவர்களுடைய தனிப்பட்ட புகைப் படங்களை ஆர்வத் தோடு கண்டு களிக் கும் இந்த பழக்கம் பலரை அடிமைப் படுத்தியிருக்கிறது. இந்த போட்டோ லர்க்கிங் பற்றி ஆய்வு செய்யும் அளவுக்கு இது இணையவாசிகளை மிகவும் பாதிக்கும் நிகழ்வாக வும் மாறியிருக்கிறது. இதில் தீவிரமாக ஆய்வு செய்துள்ள பிரிட்டன் பல்கலையை சேர்ந்த காலித் மற்றும் ஆலண் டிக்ஸ் இதற்கான காரணங்க ளையும் விரிவாக விளக்கிக் கூறியுள்ளனர்.
ஒருவிதமான உணர்வு மயமான ஆறுதலை இந்த பழக்கம் தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மற்றவர்களுடைய கல்யாண புகைப் படங்களை பார்க்கும்போது தங்களு டைய எதிர்கால வாழ்க்கை பற்றிய கற்பனையில் ஈடுபட முடிவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதேபோல மற்ற புகைப்படங்களை பார்க்கும்போதும் ஏதோ ஒரு விதத்தில் கற்பனையான லயிப்பில் ஈடுபட முடிவதாக அவர்கள் மேலும் கூறுகின்றனர். ‘ஃபிளிக்கர்’ தளமே கதி என கிடப்பவர்கள் இதனை கேள்வியின்றி ஒப்புக்கொள்ளலாம்.
‘ஃபிளிக்கர்’ மட்டுமல்ல, பிரபலமான கூகுல் உள்ளிட்ட தளங்களும் இது போன்ற விசேஷ பழக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. நவீன அடிமைகள் என்று சொல்லக் கூடிய வகையில் இணையவாசிகள் இந்த பழக்கத்துக்கு மீளமுடியாதபடி அடிமையாகி இருப்பதாக கூறப் படுகிறது.
இந்த நிகழ்வு பற்றி நியூ சயிண்ட் டிஸ்ட் பத்திரிகை விரிவான ஆய்வை செய்து சுவையான கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. நியூ சயிண்டிஸ்ட் இன்டெர்நெட் உண்டாக்கியிருக்கும் புதுவிதமான கெட்டப்பழக்கங்கள் பற்றிய கட்டுரையை படிக்கும்போது, இன்டெர்நெட் இத்தனை விதமான அடிமைகளை உருவாக்கியிருக்கிறதா என்னும் வியப்பு ஏற்படலாம்.
ஈகோசர்ப்பர், விக்கிபீடியாஹாலிக்ஸ், சீஸ்பாடர், கிராக்பெரி என இந்த பட்டியல் கொஞ்சம் நீளமாகவே இருக்கிறது. ஈகோசர்ப்பர் என்றால், இன்டெர் நெட்டில் சதா சர்வகாலம் தங்களு டைய பெயரை டைப் செய்து அதற்கு நிகராக எந்த விதமான தகவல்கள் பட்டியலிடப்படுகின்றன என்று பார்த்துக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டவர்கள் உங்களில் பலரும் கூட இப்படி ஈகோ சர்ப்பராக இருக்கலாம்.
அதிலும் குறிப்பாக கூகுல் தளத்தை பயன்படுத்துபவர்கள் மத்தியில் இந்த பழக்கம் சற்று அதிகமாகவே இருக்கலாம். கூகுல் சார்ந்த மற்றொரு பழக்கம் சிறிய உடல் கோளாறு ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் போவதற்கு பதிலாக முதலில் கூகுலில் தேடிப்பார்ப்பது.
அதாவது நோய்க்கான அறிகுறிகளை கூகுலில் டைப் செய்து அது தரும் முடிவுகளை அலசிப்பார்த்து தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு என்ன என்று அவர்களாகவே முடிவு செய்துகொள்ள இது உதவுகிறது.
பல நேரங்களில் இது இல்லாத நோயை இருப்பதாக நினைத்து அஞ்ச வைக்கும். அது மட்டுமல்லாமல், மருத்துவரை நேரில் பார்த்து சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னரும் அவர் சொன்னதை நம்பாமல் மீண்டும் கூகுலில் வந்து சரிதான என பரிட்சித்து பார்க்க வைக்கும்.சில நேரங்களில் மருத்துவர் சொன்ன தற்கும் கூகுல் தெரிவிப்பதற்கும் நேர்மாறாக அமைந்து பிரச்சனையை ஏற்படுத்தலாம். பலர் இந்த புதுவித நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேபோல கூகுலில் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்கள் ஆகியோரின் பெயரை டைப் செய்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கும் பழக்கமும் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதனை கூகுல் ஸ்டாக்கின் என்று அழைக்கின்றனர். கூகுல் மூலம் ஒருவரை விடாமல் பின் தொடர்வது என்று இதற்கு பொருள். இதை தவிர, கிடைக்கும் விவரங்களில் திருப்தி ஏற்படாமல் தொடர்ந்து விவரங்களை தேடிக் கொண்டே இருப்பதும் நடக்கிறது. இதற்கு இன்போர்னோ கிராபி என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இதேபோல மக்கள் கலைக் களஞ்சியமான விக்கிபீடியாவின் அபிமானியாக இருப்பவர்கள் பெரும்பாலான நேரத்தில் அந்த தளத்திலேயே செலவிடுபவர்களாக இருந்து விடுகின்றனர். யார் வேண்டுமானாலும் தகவல்களை இடம்பெறச் செய்து திருத்தக்கூடிய வாய்ப்பு கொண்ட இந்த தளத்தில் ஒரு சிலர் மட்டும் விடாமல் தகவல்களை திருத்தி புதிய தகவல்களை இடம்பெற வைத்துக்கொண்டே இருக்கின்றனர்.
இவர்களைத்தான் விக்கிபீடியா ஹாலிக்ஸ் என்று அழைக்கின்றனர். ஒருவர் விக்கிபீடியா அடிமையா என்று கண்டுபிடிப்பதற்காகவென்றே விக்கிபீடியா தளத்தில் ஒரு பரி சோதனையை வைத்திருக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதேபோல, மைஸ்பேஸ் தளத்தில் தங்களுடை உண்மையான முகத்தை யும், உணர்வையும் மறைத்துக் கொண்டு இன்னொருவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் விவரங்களை அளிப்பவர் கள் பலர் இருக்கின்றனர்.
மைஸ்பேஸ் மூலம் மாறுவேடம் போடுபவர்களாக இவர்கள் கருதப் படுகின்றனர். பிரபலமான வீடியோ பகிர்வு தளமான யுடியூப்பும் தன் பங்குக்கு இதுபோன்ற ஒரு பழக்கத்தை உருவாக்கியிருக்கிறது.
தாங்கள் செய்யும் பார்த்து ரசிக்க ஆள் இருக்கும் என்ற நினைப்போடு அலுப் பூட்டக்கூடிய காட்சிகளையெல்லாம் வீடியோவில் பதிவு செய்து யூ டியூப்பில் பதிவேற்றி விடுபவர்கள் கணிசமா கவே உள்ளனர்.

“ஒரு நாள்” உடலுறவு !

“ஒரு நாள்” மட்டும் கொஞ்சிக் குலாவி உடலுறவு கொள்ளும் குறுகிய கால உறவுகளைக் குறித்து ஆண்களும் பெண்களும் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த ஆராய்ச்சியில் இறங்கியது டர்காம் பல்கலைக்கழகம்.
இந்த அனுபவத்தைப் பெற்ற பெண்கள் பெரும்பாலும் குற்ற உணர்வில் உழல்வதாகவு
ம், இனிமேல் இத்தகைய உறவுகள் வேண்டாம் என மறு நாள் காலையில் (தான்) அவர்கள் நினைப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஆண்களில் 23 விழுக்காட்டினரும் பெண்களில் 58 விழுக்காட்டினரும் இந்த அனுபவத்தை (எல்லாம் முடிந்தபின்) சீச்..சீ என்றிருக்கின்றனர்.
1743 பேரைக் கொண்டு விரிவாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி பெண்களின் மன நிலையையும், ஆண்களின் மனநிலையையும் பட்டியலிட்டிருக்கிறது.
அதாவது பெண்கள் நீண்டகால உறவுப் பிணைப்பையும், கரிசனை, அன்பு, கவனிப்பு கலந்த துணையையும் விரும்புவதாகவும், ஆண்கள் “அழகான” பெண்ணை விரும்புவதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. ( இதுக்கு ஆராய்ச்சி வேற தேவையா என முணுமுணுப்பவர்கள் இதன் வழிகாட்டி ஆனி கேம்பெல்லை தொடர்பு கொள்ளவும்)
தாங்கள் பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும், நினைத்ததை விட மோசமானதாகவே இந்த அனுபவம் இருப்பதாகவும் பல பெண்கள் வருத்தம் தெரிவித்திருக்கையில், தனக்குக் கிடைத்த துணை அழகாய் இல்லை என்றே பல ஆண்கள் வருத்தம் தெரிவித்தார்களாம்.
தேவையற்ற ஆராய்ச்சிகளுக்காக பணத்தை விரயமாக்குவது மேலைநாட்டினருக்கு ஒரு பொழுதுபோக்காகவே ஆகிவிட்டது. இந்த ஆராய்ச்சிக்குச் செலவான பணத்தை ஹெய்திக்கு அனுப்பி அங்குள்ள ஏதேனும் ஒரு குழந்தைக்கு ஒரு நேர உணவை கொடுத்திருக்கலாம். புண்ணியமாவது கிடைத்திருக்கும்.

குண்டக்க மண்டக்க !!

குண்டக்க மண்டக்க – 9
பஸ்சு புஸ்சா போச்சு !'23C' பஸ்ல போறவங்க கையில் ஆக்ஸிஜன் வச்சிகிட்ட தான் போனும். நிக்க இடம் இல்லாம மூச்சு தெனரி பல பேர் வேலைக்கும், காலேஜ்க்கும் போய்ட்டு வரறாங்க ! அயினாவரத்துல இருந்து பெஸன்ட் நகர் வரைக்கும் போற பஸ்ல இரண்டு பேர் தான் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஒக்காந்து வருவாங்க. வேற யாரு ! டைவரும், கண்டக்டரும் தான். டிரைவர் எழுந்திருச்சு வண்டிய ஒட்டுன எல்லார் கதையும் கந்தலைட்டும். அவர் ஒக்காந்து ஒட்டுற வரைக்கும் தான் மத்தவங்களுக்கு நிம்மதி. ஆனா ! கண்டக்டர் எந்திருச்சு வந்து டிக்கெட் கொடுத்தா தான் நாம ஒக்காந்திட்டு இருக்குற இடம் நமக்கு சொந்தம். டிக்கெட் வாங்க எழுந்திருச்சா... அவ்வளவு தான். இடம் போச்சு ! நம்ம கண்டகர் வடிவேலு அண்ணே எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இருந்த இடத்துல இருந்து தான் டிக்கெட் கொடுப்பாரு. அவர் இடத்த விட்டு அசைய மாட்டாரு. அப்படிப்பட்ட '23C' பஸ்ல நம்ப பார்த்திபன் 'என்ட்ரி கொடுத்தா... எப்படி இருக்கும் ?வடிவேலு : ( விசிலை பலமாய் ஊதி விட்டு ) ஆ... ஏறு... ஏறு.. வண்டி கிலம்ப போவுது... சிக்கிரம்..! (சற்று நேரம் கலித்து ) போலாம் ரைட்...!அயினாவரத்தில் இருந்து கெல்லிஸ் தாண்டி புரசைவாக்கம் போகும் போது பத்து கல்லூரி மாணவர்கள் ஒன்றாய் ஏறினார்கள்.ஒரு மாணவன் : மச்சான்... நம்ப பசங்க எல்லாரும் பஸ்ல ஏறிடாங்களா...?இன்னொரு மாணவன் : ம்ம்.. எல்லாரும் ஏறியாச்சி மச்சி...ஒரு மாணவன் : அப்படியா... வா மறுபடி இறங்குவோம்பஸ்சில் ஏறிய பத்து மாணவர்களும் ஒன்றாய் இறங்கினர்.வடிவேலு : டாய்.. ஒண்ணு பஸ்ல ஏறு... இல்ல இறங்கு... என்ன சின்ன புள்ள தனமா ஏறி இறங்கி விளையாடுறது..எல்லா மாணவர்களும் கோரஸாக " ரொம்ப திட்டாதீங்க.... வலிக்குது... அழுதிடுவேன்.."வடிவேலு : (மெதுவாக ) நம்ப பிட்ட எல்லா பசங்களும் ஓட்டுறாங்க... (ஊரக்க குரலில்) போலாம் ரைட்...!அடுத்த ஸ்டாப்பிங்கில்வடிவேலு : யாரும் புட் போட்டுல நிக்க கூடாது... சிக்கிரம் ஏறுங்க..அப்போது பஸ் கீழ் இருந்த பார்த்திபன் கண்டக்டர் சீட்டில் இருந்த வடிவேலுவின் சட்டையை பிடித்து, முறுக்கு புட் போட்டில் கால் படாமல் அதன் கை பிடி மீது கால் வைத்து உள்ளே நுழைகிறார். பார்த்திபன் வடிவேலுவின் சட்டையை பிடிக்கும் போது உயிர் போகும் அளவிக் கத்தினான்.வடிவேலு : (பார்த்திபன் முகத்தை பார்க்காமல்) டாய்...! படிக்கட்டு வழியா வர வேண்டியது தானே... ஏன்டா என் சட்டைய புடிச்சு ஏறி வந்த...?பார்த்திபன் : நீங்க தான் புட் போட்டுல நீக்க கூடாது...! புட் போட்டுல நீக்கமா எப்படி ஏறி வரது...!வடிவேலு : அவனா நீ...! (மனதுக்குள் ) மறுபடியும் வந்துட்டானே... என் உசுரு என் கையில இல்லனு தெரிஞ்சு போச்சு. ஜாக்கிரதையா பேசனும்.பார்த்திபன் : அண்ணா சாலை போறதுக்கு ஒரு டிக்கெட் வேண்டும்... எவ்வளவு..?வடிவேலு : அண்ணா சாலைக்கு அஞ்சு ரூபா..!பார்த்திபன் : என்னது ! அண்ணா சாலை அஞ்சு ரூபாவா...? அப்போ LIC பில்டிங் விலை எவ்வளவு...வடிவேலு : ( மனதுக்குள் ) ஆரம்பிச்சிட்டானே... ! என் வேலை போய்டும் போலிருக்கே... (பார்த்திபனிடம்) அண்ணா சாலைக்கு போறத்துக்கு அஞ்சு ரூபா.. போதுமா.பார்த்திபன் : அப்படி சொல்லி டிக்கெட் கொடு..வடிவேலு : ( முனு முனுத்தப்படி ) எல்ல்லா கண்டக்டரும் இப்படி சொல்லி தான் டிக்கெட் கொடுக்குறாங்க... இவன் மட்டும் என்ன ரொம்ப படுத்துறானே.. பேசாம டிக்கெட் கொடுக்குற சாக்குல இந்த இடத்த விட்டு போவோம்.இது வரை தன் இடத்தை விட்டு டிக்கெட் கொடுக்காத வடிவேலு முதல் முறையாக பார்த்திபனுக்கு பயந்து தன் இதைத்தை விட்டு முன் பக்கத்தில் இருப்பவர்களுக்கு டிக்கெட் கொடுக்கிறான்.பார்த்திபன் : ஆமா...! கையில இவ்வளவு டிக்கெட் வச்சிக்கிட்டு நீ ஏன் டிக்கெட் கேக்குற...?வடிவேலு : உனக்கு புன்னியமா போவும்... இன்னைக்கு ஒரு நாள் என்ன விட்டுடேன்...பார்த்திபன் : சரி ! போனா போது போலச்சி போ... - என்று சொல்லி பார்த்திபன் மீண்டும் பின் பக்கம் வந்தான்வடிவேலு : (மனதுக்குள்) அப்பாடா... இன்னைக்கு ஒழுங்க வீடு போலாம்...வடிவேலு : டிக்கெட்... டிக்கெட்...டிக்கெட்ஒருவர் : பெஸன்ட் நகர் இரண்டு தாங்க...- என்று கூறி நூறு ரூபாய் நீட்ட..வடிவேலு : சரியான சில்லரை கொடுப்பா...ஒருவர் : ஸாரிங்க... சில்லரை இல்ல...வடிவேலு : சில்லரை இல்லாம ஏன் வண்டியில ஏறுன... இறங்கு....அடுத்த ஸ்டாப்பில் அந்த நபர் கீழே இறங்கினார். இதே போல் சரியான சில்லரை இல்லாததால் மேலும் இரண்டு பேர் பஸ்சில் இருந்து இறங்கினர். இச்சமயத்தில் ஒரு ரிப்போட்டர் அந்த பஸ்சில் ஏற...ரிப்போட்டர் : ஒரு மலாப்பூர் கொடுப்பா...வடிவேலு : இரண்டு ரூபா டிக்கெட்டுக்கு... நூறு ரூபா கொடுக்குற... சில்லரை இல்லானா இறங்கு,,,ரிப்போட்டர் : என்ன புது ரூல்சா இருக்கு..! உனக்கு தேவ பணம். ஒழுங்கா டிக்கெட் கொடு...வடிவேலு : ஸரி ! நூறு ரூபா கொடு... சில்லரைய பெஸன்ட் நகர்ல வந்து தரேன்...ரிப்போட்டர் : என்ன அடவடி தனமா பேசுற... உன்ன பத்தி பத்திரிக்கையில எழுதி நாரடிச்சிடுவேன்.அதுவரை அமைதியாய் இருந்த பார்த்திபன் இந்த பிரச்சனையில் மூக்கை நுழைத்தான். வேறு எதற்கு ! இன்னும் குட்டையை குழப்புவதற்கு தான்.பார்த்திபன் : (ரிப்போட்டரிடம்) ஹேலோ பாஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க...வடிவேலு : (முனு முனுப்புடன் ) இவன் எதுக்கு மறுபடியும் வந்தான்... என்ன பண்ண போறானோ...பார்த்திபன் : (வடிவேலுவிடம்) இன்னும் எத்தன பேர சில்லரை இல்லாம பஸ்ச விட்டு இறங்க சொல்லுவ... பேசாம ஒண்ணு பண்ணு... யாருக்கும் சில்லரை கொடுக்க முடியாத நீ வண்டிய விட்டு இறங்கு...வடிவேலு : நா எதுக்கு...?பார்த்திபன் : நீ தான் சொன்ன... சரியான சில்லரை இல்லனா வண்டிய விட்டு இறங்கு... உன் கிட்ட சில்லரை இல்ல. அப்போ இறங்கு...வடிவேலு : வேண்டாம்... ரொம்ப கஷ்டப்படுவ...பார்த்திபன் : யாரு...?வடிவேலு : வேற யாரு... நான் தான்...பார்த்திபனும், ரிப்போட்டரும் வடிவேலுவை பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு சென்றனர்.சில்லரை இல்லனு பஸ்ச விட்டு கண்டக்டர் இறக்குனது இது முதல் தடவை. வேலை செய்யும் போது பாதி வழியில் சொந்த விஷயமாக பஸ்சில் இருந்து இறங்கியதால் வடிவேலுவுக்கு கண்டக்டர் வேலை போனது. இப்போது வடிவேலு சில்லரைக்கே திண்டாடிக் கொண்டு இருக்கிறார்.

ஜல்லிக்கட்டு: காட்டுமிராண்டிதனமும், ‘The Lottery’ சிறுகதையும்.

ஜல்லிக்கட்டு: காட்டுமிராண்டிதனமும், ‘The Lottery’ சிறுகதையும்.

ஒரு முறை, பூமியில் வாழ்ந்த மக்கள் பஞ்சத்தில் அவதிபட, அந்த பஞ்சத்தில் இருந்து அவர்கள் தப்பிக்க வேண்டுமானால், ’தினமும் மூன்று வேளை குளித்து, ஒரு வேளை சாப்பிட சொல்’ என சிவபெருமான், நந்தியிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார். ஆனால், பூமிக்கு வந்த நந்தியோ மக்களிடம் மறந்துப்போய் அதை மாற்றி சொல்லிவிட்டது. அதாவது, ‘ஒரு வேளை குளியல், மூன்று வேளை சாப்பாடு’ என! கோபம் கொண்ட சிவபெருமான், நீ செய்த தவறுக்காக இனி மக்களுக்காவே போய் உழை, உதவு என நந்தியை பூமிக்கு அனுப்பிவிட்டார்.அப்படி அனுப்பிய நந்தியை ஒவ்வொரு பொங்கலுக்கும் வந்து சிவன் பார்ப்பது தான் ‘மாட்டு பொங்கல்’. என எங்கள் ஊரில் மாட்டு பொங்கலுக்கு விளக்கம் கூறுவார்கள்.

எது எப்படியோ, நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம், சிவன் வந்தால் என்ன போனால் என்ன. இந்த நன்றி உண்ர்ச்சி கண்டு மாடுகள் தமக்குள்,‘ நாயை விட நன்றியுள்ளவன் மனிதன்’ என்று தான் நினைத்துக்கொள்ளும். ஆனால் அது அப்படி நினைத்து முடிப்பதற்க்குள், ‘ஜல்லிக்கட்டு’ என்னும் போட்டியை வைத்து தன் வேலையை காட்ட துவங்கிவிடுகிறான், மனிதன்.

ஜல்லிகட்டு வீர விளையாட்டாம்! ஒவ்வொரு முறையும் பேப்பரில் 4 பேர் சாவு, 5 பேர் சாவு என்ற செய்தியை படிக்கும் பொழுது. இதில் என்ன வீரம் இருக்கிறது என்று தான் எண்ணத் தோன்றுகிறது. இவர்கள் கிரிக்கெட் விளையாடுபவர்களையும் ’வீரர்’ என்று தான் கூறுகிறார்கள்; ராணுவத்தில் இருப்பவரையும் ‘வீரர்’ என்று தான் கூறுகிறார்கள்? என்னுடைய கேள்வி உண்மையாகவே மிரளும் மாட்டை பிடிப்பது ஒரு வீராமா?

இங்கு இழக்கும் உயிரை, ஒரு தீவிரவாதியுடன் போரடி இழந்தாலும் பரவாயில்லை; அல்லது அங்கு மாடுகளுடன் போரடுவதற்க்கு பதில் ஒரு ‘இரட்டை தம்ளருக்காக’ போராடினாலும் பரவயில்லை. இதையெல்லாம் வீரம் எனலாம், வாயில்லா மாடு, கூட்டத்தை பார்த்து மிரளுகிறது அதை அடக்குகிறார்களாம்! அது வீர விளையாட்டாம்! என்ன கொடுமை சார் இது?
ஆளும் வர்கம், மேடையில் அமர்ந்து களிக்க உழக்கும் வர்க்கம் தன் உயிரைக் கொடுப்பது தான் இந்த விளையாட்டின் உட்கரு.இதை வீரம் என்றும், பரிசு என்று பாட்டாள் வர்கம் தன் உயிரை கொடுத்துக்கொண்டிருக்க, ஆளும் வர்கம் அதற்க்கு சந்தோஷமாக தலையசைத்துக் கொண்டிருக்கிறது.

இதில் இன்னொரு கொடுமை பாதுக்காப்பாக இதை நடத்துவார்களாம்?, எப்படி உயிர் போவதற்க்கு பாதுகப்பு , உலக வரலாற்றிலேய இங்கு தான் கிடைக்கும்.
அவர்கள் கூறும் இன்னொறு விஷயம் மரபு, கலச்சாரம், பழசை விட்டுவிட கூடாது, மக்களின் செண்டிமெண்ட்.
இதை கேட்க்கும் பொழுது எனக்கு நீண்ட நாள் முன் படித்த ஷெர்லி ஜாக்சனின் ’த லாட்டரி’ சிறுகதை தான் நினைவுக்கு வருகிறது.அந்த கதை..
ஒரு கோடைக் காலம், பள்ளிகள் விடுமுறையில் உள்ள ஒரு நாளில் ஊர் கூடுகிறது.அது ‘லாட்டரி நாள்’. வருடத்திற்க்கு ஒரு முறை இந்த நாளை கடைபிடிக்கிறார்கள்.

மக்கள் ஒவ்வொரு குடும்பமாக, கதைகள் பேசியவாரு ஊரின் மத்தியில் கூடுகிறார்கள்.பலரின் மனதில் இருக்கும் கேள்வி இந்த ‘லாட்டரி நாள்’ அவசியம் தானா?

அவசியமில்லை தான், இது எல்லோருக்கும் தெரியும் ஆனால் மரபு? தம் முன்னோர்கள் கடைபிடித்த வழக்கமாயிற்றே, விட்டுவிடவும் பயமாக இருந்தது. இன்னும் தங்கள் குழந்தைகளும், இதை கடைபிடிக்க வேண்டும் என்பதும் அவர்கள் ஆசையாக இருந்தது.

அதற்க்குள் அங்கு ஊர் பெரியவர் ஒரு கறுப்பு நிற, பழைய காலத்து பெட்டியுடன் நுழந்தார்.அந்த பெட்டியை நடுவில் உள்ள ஒரு முக்காளி மீது வைக்க சிலர் உதவினார்கள்.
ஒவ்வொரு முறை லாட்டரி முடியும் பொழுதும் புது பெட்டியின் அவசியத்தை பற்றி அவர் பேசுவதும், மக்கள் பழதை மாற்ற கூடாது, என்ற செண்டிமெண்டை முன் வைப்பதுமாக ஆண்டுகள் ஓடிக்கோண்டிருந்தன.

பொதுவாக மற்ற ஊர்களில், லாட்டரி ஒரு நாள் முழுவதும் கூட நடக்கும் ஆனால், இந்த ஊரிலோ வெறும் 100 பேர் என்பதால் காலை 10 மணிக்கு ஆரம்பித்து, லட்டரியை முடித்துவிட்டு சீக்கிரமாகவே வீட்டிற்க்கு திரும்பிவிடலாம்.

ம், என்று ஊர் பெரியவர் சொன்னதும். ஒவ்வொருவராக வந்து, அந்த கறுப்பு பெட்டியில் இருந்த மடிக்கப்பட்ட துண்டு தாள்களை எடுத்தனார்.

ஒவ்வொருவராக பிரித்து பார்க்க அனைவரின் தாளுமே வெண்மையாகவும் காலியாகவும் இருந்தது.

யாருக்கு விழுந்துள்ளது, லாட்டரி யாருக்கு விழந்துள்ளது என ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ள.. கடைசியாக அங்கிருந்த ஒரு பெண்மணியின் தாளில் ஒரு கரும் புள்ளி, அவளுக்கு தான் அந்த வருட லாட்டரி.

ஊர் பெரியவர், ம், சீக்கிரமாக முடியுங்கள் , நேரமகிறது, வீட்டிற்க்கு செல்ல வேண்டும் என அவசர படுத்தினார்.

லட்டரி விழந்த பெண் நடுவில் அழுதபடி நிற்க, ஊர் மக்கள் ஒவ்வொருவரும் கையில் கல்லை எடுத்து அவளை அடிக்க தொடங்கினார்….

நாம் பழைய மரபுகள், கலச்சாரம் என்கிற பெயரில் நம் அடுத்த சமுதாயதிற்க்கு என்னவெடுத்து செல்கிறாம்? ரத்தம், உயிரை பறிக்கும் மூட வழக்கங்களையா?

வீரம் என்பதற்க்கான அர்த்தம் உண்மையாக புரிதல் வேண்டும். நம் மனடை அடக்கி, அங்கும் இங்கும் மிரளாமல், கெட்டதை எதிர்த்து, போராடி, நம்மை நாம் வெல்வதே வீரம். அப்பாவி மாடுகளை துன்புறுத்துவதும், கொல்வதும், அதில் மரணமடைவதிலும் இல்லை வீரம்.

இனி வரும் சமுதாயத்திற்க்கும் மாடுகளுக்கும் ஒரு நல்ல உற்ச்சாகமான, உயிரிழப்புகள் இல்லாத பொங்கலை பரிசாக தருவோம்.

பொம்மலாட்டம்

பொம்மலாட்டம்

"இந்த மழைல அடிச்ச டக்கீலாவெல்லாம் எறங்கிடும் போலருக்கே...வேகமா நட மாதி...காங்கிரஸ்காரய்ங்க காமராஜ் ஆட்சி அமைச்ச மாதிரி இம்புட்டு மெதுவா நடந்தா என்னிக்கி போய் சேர்றது..." வேதாளம் மாதித்தனை அவசரப்படுத்தியது.... "அவய்ங்க ஆட்சி அமைக்கிறாய்ங்களோ இல்லியோ....ஒனக்கு அவய்ங்கள மாதிரியே வாயி....உள்ள சரக்கு இல்லாட்டியும் பேச்சு மட்டும் ஒண்ணும் கொறச்சல் இல்ல...." "அதான் சொன்னன் இல்ல...உள்ள ஏத்தின சரக்கெல்லாம் எறங்கிடுச்சி...இனிமே எதுனா ஏத்துனா தான் பேச முடியும்...." "எப்பிடி...தமிழ்நாட்டு காங்கிரஸ் காரய்ங்க மாதிரியா...ஓசில கெடச்சா ஒரு குவாட்டருக்கு நாலு குவாட்டருன்னு அடிச்சிட்டி நடுத்தெருவுல அசிங்கம் பண்ண மாதிரி தான் அவய்ங்க பேசிட்டு இருக்காய்ங்க...அவய்ங்கள விடு...எங்க உன் குகை..." "இந்தா வந்திடுச்சி...இது தான்...." குகையைப் பார்த்த மாதித்தனுக்கு எரிச்சலாக இருந்தது...சில உடைந்த பாத்திரங்கள்...உடைந்த பாட்டில்கள்..நசுங்கிய பியர் கேன்கள்...பாதி அடித்த சிகரெட்கள்...என்றோ சாப்பிட்டு விட்டு மீதி வைத்த பீட்ஸா.... "என்ன கருமம் இது...இதெல்லாம் ஒரு எடம்...கார்ப்பரேஷன் குப்பைத் தொட்டியே இதை விட நல்லாருக்கும்...." "அடக்கி வாசி மாதி...எலெக்ஷன் டைம்ல அவனவனுக்கு இதயத்துல தான் எடம் கெடைக்குது....அந்த எடத்துக்கு இந்த எடம் எவ்வளவோ க்ளீன்..." "அடக் கெரகம் புடிச்ச சனியனே...எங்க சுத்தினாலும் அங்கயே வர்றீயே...ஒனக்கெல்லாம் அவாள் இவாள்....அப்புறம் டவுசர் கிழிஞ்ச வேதாள்னு ஒரு கவுஜ எழுதினா தான் சரிப்படுவ போலருக்கு...மாஞ்சா நெஞ்செனல்லாம் வந்து ஒன்ன நொங்கு எடுக்குறதுக்குள்ள கதைய சொல்லு..." "என்னது மாஞ்சா நெஞ்சனா...பேரக் கேட்டாலே அதிருதுதே...." மாஞ்சா நெஞ்சனை நினைத்து தன் நெஞ்சை பிடித்துக் கொண்ட வேதாளம் கதையை தொடர ஆரம்பித்தது.... ================================ பாவைக் கூத்து....பரவைக் கூத்து...தோல் கூத்து..பொம்மலாட்டம்...மிகப்பெரிய கூத்து எது... ஆர்ப்பரிக்கும் கடலின் வேகம்...கண்ணுக்கு தெரியாத காற்றின் வேகம்...எது வேகம்...இல்லை என்கிறார்கள்...இருக்கிறது என்கிறார்கள்... ஆனால் மனம் ஆடும் கூத்து...தாம் தோம் தக்கிட தோம்...தக்கிட தக்கிட தோம்....முயலகன் மேல் நடராஜர் ஆடும் கூத்தை விட அதி வேகமாய் சுழன்றாடுகிறது... அவனவன் மனம் அவனவன் மேடை...ஆடும் வரை ஆடும்...பார்ப்பவர் யாருமில்லாவிட்டாலும் தினம் ஒரு கூத்து...இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம்...எந்த இயந்திரமும் இல்லாமல் எல்லாக் காலத்திற்கும் எந்த நொடியிலும் பரவும் ஜோதி...மானஸ தேவியை எரித்த ஜோதி...மேடை சாம்பலாகும் வரை எரியும் ஜோதி...ஜோதி ஜோதி ஜெக ஜோதி.....ஜோதியை அணைத்தவர் எவருமில்லை...அணைக்கப்படாதவர் எவருமில்லை...ஜோதியை கலந்து ஜோதியாய்...பிறக்கும் போதே விலங்குடன் பிறந்தவன் மனிதன்...விலங்கு வெளியில் இல்லை...உள்ளே...சில சமயங்களில் வெளிச்சம் தரும் ஜோதியாய்...பல நேரங்களில் உள்ளிருந்து எரிக்கும் ஜோதியாய்... வைஜெயந்தியின் மனம் கூத்தாடிக் கொண்டிருந்தது... ஜெய்..ஜெய்....ஏன் மீண்டும் ஜெய்...என்ன ஆயிற்று இன்று...ஏதோ புதிதாய் இத்தனை நாட்களாய் இல்லாமல்...குருமூர்த்தியா? அவருக்கு என்னவோ ஆகிவிட்டது...தினமும் நேராக பார்க்கும் ஆள் இன்றைக்கு எங்கோ பார்த்துக் கொண்டு... இல்லை வைஜெயந்தி...உண்மையை சொல்...குருமூர்த்தியால் தான் உன் மனம் ஆடுகிறதா...நீ தினமும் தான் குருமூர்த்தியை பார்க்கிறாய்...ஆனால் ஏன் இன்று... குமரன்??.... அது...அது தான் வைஜெயந்தி...உனக்கு குமரனை பிடித்திருக்கிறது...அவன் உளறல் பிடித்திருக்கிறது...வெட்கத்துடன் அவன் சிரிப்பது பிடித்திருக்கிறது... அவள் மனம் குதித்தது... ச்சீ....கெட்ட புத்தி...அவன் நல்லாருக்கான்....அதுமில்லாம கொஞ்சம் ஜெய் மாதிரியே இருக்கான் இல்ல....அதான்...வேற ஒண்ணுமில்ல.... வேற ஒண்ணுமில்லையா...நிஜமாவே?.... ம்ம்ம்....இல்ல எனக்கு ஜெய் ஞாபகமா இருக்கு....குமரன் ஜெய் மாதிரியே இருக்கான்...அதே உயரம்...அதே மாதிரி கொஞ்சம் கோணல் சிரிப்பு...அப்புறம் அதே உளறல்...ஆனா இவன் ஜெய்யை விட கொஞ்சம் கறுப்பு... அப்ப உனக்கு ஞாபகம் ஜெய் தான்னு சொல்ற... இல்லியா பின்ன.... அப்ப போய் ஜெய்யை பார்க்க வேண்டியது தான...இங்க என்ன பண்ற... இன்னும் ஆஃபிஸ் முடியலையே....நாலு மணி தான் ஆகுது...வேலை இருக்கே... அது தினம் இருக்கறது தான்...ஒனக்கு ஞாபகம் ஜெய் மேல தான்னு சொன்னா எங்க இப்ப ப்ரூவ் பண்ணு... எப்பிடி.... பெர்மிஷன் போட்டுட்டு போ...ஒனக்கு குமரன் மேல லவ்வுன்னு நான் சொல்றேன்...இல்ல ஜெய் தான்னு சொன்னா நீ தான் ப்ரூவ் பண்ணனும்... அசிங்கமா பேசாத...அந்த பையன் வயசென்ன...என் வயசென்ன...டிசம்பர் வந்தா முப்பத்தி ஓண்ணாவுது... அவன் பாப்பா மாதிரி இருக்கான்.... ஐ....வயசெல்லாம் கணக்குப் போட்டிட்டியா... மனம் எக்காளம் கொட்டியது.. மனதுடன் சண்டையிடுவது வைஜெயந்திக்கு சலிப்பாக இருந்தது....எத்தனை நாள் உன்னுடன் சண்டையிடுவது... உன் தொல்லை தாங்க முடியலை...சரி...நான் இப்பவே பெர்மிஷன் போட்டுட்டு போறேன்...நீ தப்புன்னு ப்ரூவ் பண்றேன்... மொதல்ல ப்ரூவ் பண்ணு வைஜ்...அப்புறமா பேசலாம்... ============================ வைஜெயந்தி பர்மிஷன் போட்டு விட்டு வெளியேறிய போது மணி நான்காகியிருந்தது....உதய சூரியன் உதிக்கிறதோ இல்லையோ மதுரை சூரியன் சுட்டெரிக்க தவறுவதில்லை...அது மாலையானாலும்.... மேல மாசி வீதி, கீழ மாசி வீதி, சிம்மக்கல், மீனாட்சி அம்மன் கோயில்...பெரும் கூட்டம் பெரியார் பஸ் ஸ்டாண்ட்...மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போகணும்னா பெரியார் பஸ் ஸ்டாண்ட்ல எறங்கு....மீனாட்சி அம்மன்...பெரியார்...இது மீனாட்சிக்கோ பெரியாருக்கோ தெரியுமா.... கோயிலுக்கு வந்தவர்கள்...உசிலம்பட்டிக்கு பஸ் எங்க மாப்ள ஏறணும்...தேடுபவர்கள்...கணக்கு மாஸ்டர் சூப்பரா இருக்காருல்ல...எங்க ஐயன் தோல உரிச்சிருவாருடி....மாப்ள...ஒரு ரவுண்டு ஏத்திக்கிட்டு அப்பறமா தங்க ரீகல் போலாம்டா...பேசிக் இன்ஸ்டின்க்ட்னு புதுசா போட்ருக்காய்ங்க...கரெக்டா இருக்கும்...தேவர் ஒயின்ஸின் நீண்ட கால கஸ்டமர்கள்...தலைவரு அரசியலுக்கு வந்தா இவய்ங்கல்லாம் தாங்க மாட்டாய்ங்க...தாயோளிங்க...ரசிகர்கள்... பாண்டியன் பஸ் பிடித்து...கூட்டத்தோடு கூட்டமாக நசுங்கி....வைஜெயந்தி பழங்காநத்தம் வீட்டை அடைந்த போது....மணி ஐந்தாகி இருந்தது.... ====================================== அப்பா...ஆஃபிஸை விட்டு சீக்கிரம் வந்தது நிம்மதியாக இருக்கிறது...பொய்யானது என்றாலும் விடுதலை...கொஞ்ச நேர விடுதலை... ஆனால்....வீட்டில் யார் இருப்பார்கள்...சுபாவுக்கு இன்னும் ஸ்கூல் முடிந்திருக்காது...வந்திருக்க மாட்டாள்....வந்தவுடன் குதிக்கப் போகிறாள்...அம்மாவை பார்த்து....அவள் குதிப்பதை பார்த்து நாளாயிற்று...சின்ன சின்ன சந்தோஷங்களை கூட கொடுக்க முடியாமல்...என்ன வாழ்க்கை.... ஜெய்....ஜெய் இருப்பான்....லவ் யூ ஜெய்...எனக்காக எல்லாவற்றையும் உதறியவன் அல்லவா நீ... ஏனோ என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு மனம் புரட்டிப் போடுகிறது..நான் ஏதோ தவறு செய்கிறேன்...உறுத்தலாக இருக்கிறது....நீ தான் வழி சொல்ல வேண்டும்....உனக்கு தெரியும் ஜெய்.... வைஜெயந்தியின் மனம் அவளை விட வேகமாக நடந்தது.... ========================== வீட்டின் கதவை திறந்து....எங்கிருந்தோ வந்திருந்த ஒரு இன்லண்ட் லெட்டர்...பால் பாக்கெட்...ஏதோ ஒரு துண்டு நோட்டீஸ்....அவளுக்கு எதையும் பார்க்க நேரமில்லை....படுக்கையறைக்குள் பாய்ந்தாள்.... ஜெய் வழக்கம் போல் சிரித்துக் கொண்டிருந்தான்... "ஜெய்...ஒனக்கு ரைட் ஹாண்ட் தான...அப்புறம் என்ன சிரிக்கும் போது மட்டும் லெஃப்ட் ஹாண்ட்...." "ஐயோ வைஜ்...இதெல்லாமா கேப்பாங்க....தெரிலையே....ச்சின்ன வயசு பழக்கம்..."அவனைப் பார்த்ததும் பிடித்துப் போக வைத்தது இந்த சிரிப்பு தான்...கொஞ்சம் கோணலாக...கொஞ்சம் வெட்கத்துடன்...கலைந்த தலை...இடது கையில் நெற்றியை தாங்கி....ஒனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியல வைஜ் என்பது போல‌...அதே சிரிப்பு..."ஜெய்...இன்னைக்கு குமரன்னு ஒரு பையன் வந்திருந்தான்...உன்னை மாதிரியே சிரிப்பு...எனக்கு உன் ஞாபகம் வந்திருச்சி...ஒரு வேளை அவன் உனக்கு தெரிஞ்சவனா இருப்பான்னு நினைச்சேன்...ஜெய்....எனக்கு அவனை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறியா....இல்ல...எனக்கு தெரியல....இன்னிக்கு திங்கட் கிழமை தான...வெள்ளிக்கிழமை போட்ட பூ அதுக்குள்ள எப்படி வாடிப் போச்சி...பூக்காரன் வந்தா பூ வாங்கணும்...உண்மைய சொல்றேன்...மனசு ரொம்ப அல்லாடுது ஜெய்...ப்ளீஸ்...தப்பா எடுத்துக்க மாட்டதான...உனக்கு புரியும் ஜெய்..." எந்த பதிலும் சொல்லாமல் ஜெய் என்ற ஜெய்ஷங்கர் அமைதியாக இருந்தான்... ஃபோட்டோவில் அதே வெட்கச்சிரிப்பும் வெள்ளிக்கிழமை போட்ட மாலையுமாக....=====================சிவாஜி ரேஞ்சுக்கு ஓவர் ஆக்டிங் உடன் கதை சொல்லி வந்த வேதாளத்தை மாதித்தன் அவசரமாக கை நீட்டி தடுத்தான்... "நிறுத்து நிறுத்து...." "என்னா என்னாச்சி மாதி...நீ கடுப்பாயி என் மூஞ்சில உன் பீச்சாங்கைய வைக்கப் போறேன்னு நெனச்சேன்"... "ம்ம்க்கும்...அப்படி ஒரு நினைப்பு வேறயா ஒனக்கு....ஒம் மூஞ்சில பீச்சாங்கைய வச்சா அப்புறம் அதை ஆசிட் ஊத்தி தான் கழுவணும்..." வேதாளம் முறைத்தது... "அப்புறம் என்னாத்துக்கு தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரி கைய காட்டுன....""தங்கமாவது...தகரமாவது...அதெல்லாம் ஒண்ணுமில்ல...குளுரு பின்னி எடுக்குது....குளிருக்கு தேவை மது மாதும்பாய்ங்க....இங்க இருக்கறது ஓண்ணு தான்...அதனால அந்த டக்கீலாவ எடு....ஒரு ரவுண்டு அடிச்சிட்டு மீதி கதை கேக்கலாம்..." "ஹிஹிஹி....நானே தொறக்கலாம்னு இருந்தேன்...நீயே சொல்லிட்ட...." புதுசாய் பதவி கிடைத்த எம்.எல்.ஏ போல் வேதாளம் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை இளித்தவாறே பாட்டிலை திறக்க ஆரம்பித்தது...

இணைய பெயரை எப்படி உபயோகிப்பது ?

இணைய பெயரை எப்படி உபயோகிப்பது ? -1
வாசகர்களே நேற்று இணைய பெயர் எங்கே பதிவு செய்வது பற்றி தெரிந்துகொண்டோம் .நண்பர் அறிவழி நான் எழுதிய பதிவை படித்து அவர் தன்னக்கென இணைய பெயர் (Godaddy) யில் தன்னுடைய பெயரை பதிவு செய்தார்.அவர் குறைந்தது (10-15) நிமிடங்கள் செலவிட்டிருப்பார், கடன் அட்டை இருந்ததால் வேலையை உடனடியாக முடித்துவிட்டு என்னை (Google டாக் யில் ) அழைத்து நான் பதிவு செய்துவிட்டேன் ஆனால் என்னுடைய இணைய பெயரை திறந்தால் ஏதோ ஒரு பக்கத்தை காட்டுகிறது என்றார், மேலும் arivili.com என்னுடைய வலைப்பூவை திறக்க வேண்டும் என்றார்.நீங்கள் உங்கள் இணைய பெயரை பிளாக்கர் வழியாக பதிவு செய்யாமல் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அமைப்புகளை உங்கள் இணைய பெயர் பதிவாளரிடம் செய்ய வேண்டும் .சாதரணமாக இணைய பதிவாளர்கள் (name server) என்று சொல்லப்படும் ஒரு தேர்வை மட்டும் கொடுப்பார்கள் அவர்களிடம் இணைய பெயர் விலை குறைவாக கூட இருக்கலாம் ஏன் என்றால் ஒரு சில வசதிகள் இல்லை .நீங்கள் Godaddy அல்லது வேறு பெரிய நிறுவனத்திடம் பதிவு செய்திருந்தால் அவர்கள் உங்களுக்கென இணையபெயர்க்கு தேவையான அனைத்து வசதிகள் இருக்கும்.உங்கள் இணைய பதிவாளர் (Godaddy) கணக்கில் சென்று பாருங்கள் அங்கே இரண்டு தேர்வுகள் இருக்கும்.1. Name Server2. Managed DNS (or) DNS control and MX controlஇங்கே நமக்கு தேவையானது (DNS control) உங்களிடம் DNS control இல்லை என்றால் உங்கள் பதிவாளரை அணுகி கேள்வியை கேளுங்கள் .நீங்கள் Godaddy யில் பதிவு செய்து இருந்தால் கண்டிப்பாக இந்த தேர்வு இருக்கும்உங்கள் கணக்கில் சென்று உங்கள் இணைய பெயரை திறந்தால் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு கட்டுப்பாடு இருக்க வேண்டும்அதில் Name Server என்று ஒன்று இருக்கும் அதில் நீங்கள் எதவும் செய்ய வேண்டாம் Godaddy உங்களுக்கென அவர்களே (nameserver) அமைப்புகளும் செய்து வைத்திருப்பார்கள்.அதற்க்கு கீழே Forwarding மற்றும் DNS control என்று இருக்கும் அதில் இரண்டிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும்Forwarding தேர்ந்தெடுத்து உங்கள் இணைய பெயர் (எ .டு .கா ) http://www.arivili.com என்று மாற்றி சேமித்து விடுங்கள் .பிறகு DNS control சென்று அதில் CNAME என்ற களத்தில் www என்று ஒரு களம் இருக்கும் அதில் (ghs.google.com) என்று மாற்றி விட்டு சேமித்தால் போதும்.பிறகு உங்கள் பிளாக்கர் சென்று settings --> tab இல் --> Publishing தேர்ந்தெடுங்கள்.அதில் custom domain தேர்வு செய்தபின் அடுத்த பக்கத்தில் பிளாக்கர் புதிய பெயர் வேண்டுமா என்று கேட்கும் அதற்க்கு அருகில் (Switch to advanced settings) தேர்ந்தெடுங்கள்.பிறகு advanced settings ல் உங்கள் இணைய பெயரை (எ .டு .கா ) http://www.arivili.com என்று மாற்றி சேமித்து விடுங்கள் .இப்பொழுது உங்கள் வலைப்பூ புதிய பெயருடன் வலம் வரும்.குறிப்பு : நீங்கள் மாற்றம் செய்த அனைத்தும் 24-48 மணிநேரத்துக்குள் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

காணும் பொங்கலா குப்பை பொங்கலா ?

காணும் பொங்கலா குப்பை பொங்கலா ?

நேற்று மெரினாவில் வீசப்பட்ட 120 டன் குப்பைகள் இன்று அகற்றம். செய்தி கீழே... காணும் பொங்கல் தினமான நேற்று மட்டும் சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 4 லட்சம் பேர் கூடினார்கள். கடற்கரையில் அவர்கள் கொண்டுவந்த உணவையும், அங்கு கடையில் விற்கப்பட்ட உணவு வகைகளை வாங்கியும் சாப்பிட்டு, குடும்பத்துடன் குதூகலித்தனர். பின்னர், சாப்பாடு பொருட்கள் எடுத்துவந்த பாத்திரங்கள் தவிர ஏனைய குப்பைகளை கடற்கரையில் வீசிச்சென்றனர். இதனால், இன்று காலை சென்னை மெரினா கடற்கரை பிளாஸ்டிக் கப், பேப்பர் கப், குடிநீர் பாட்டில்கள், பாலீத்தின் கவர், இலை என குப்பைகளாக காட்சி அளித்தது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கடற்கரையின் ஒருமுனையில் இருந்து மற்றொரு பகுதிவரை குப்பை அள்ளும் வாகனமும் மூலமும், கைகளாலும் குப்பைகளை அகற்றினார்கள். வழக்கமாக சில டன்கள் குப்பைகள் மட்டுமே இருக்கும் மெரினா கடற்கரையில், இன்று மட்டும் 120 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இந்த குப்பைகள் அனைத்தும் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.1 டன் என்பது சுமார் 900 கிலோ
அன்று அப்பாவும் அம்மாவும் ஒரு வேலை விஷயமாக வெளியூர் போயிருந்தார்கள். வீட்டில் அந்தப் பதினோரு வயதுச் சிறுமி மட்டுமே! ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடி ஜாலியாகக் குதித்து விளையாடிக்கொண்டிருந்த அவளுக்கு திடீரென வித்தியாசமாக ஏதோ ஒரு ஃபீலிங். உடம்பெல்லாம் வலித்தது. குறிப்பாக வயிறு! அவள் தன் வயிற்றைப் பிடித்தபடி உட்கார, அவள் கண்ட்ரோலே இல்லாமல் யூரின் போல ஏதோ வெளிவந்தது. அந்தச் சிறுமி பயந்துவிட்டாள். கை வைத்துப் பார்க்க, கீழே வெளிவந்தது ரத்தம்!.... அவளுக்கு தான் `பெரியவளாகி' விட்டோம் என்ற விஷயம் தெரியவில்லை.... இதுவரை தன் அம்மாவோ, வகுப்பில் தோழிகளோகூட அதுபற்றிப் புரியும்படி அவளுக்கு எடுத்துச்சொன்னதில்லை என்பதால், தனக்குள் இருந்து ஒரு கட்டுப்பாடே இல்லாமல் ரத்தம் வழிவது கண்டு பயந்துவிட்டாள்.தனக்கு ஏதோ கட்டுப்படுத்த முடியாத பெரிய வியாதி வந்துவிட்டது. இனி வாழ்க்கையில் தான் எப்படி மற்றவர்கள் முன் தலைகாட்டுவது என்று பயந்து குறுகினாள். தன் அப்பா அம்மாவுக்குத் தெரிந்தால் தன்னை இனி ஏற்றுக் கொள்வார்களோ, மாட்டார்களோ என்றெல்லாம்கூட அவள் கற்பனை ஓடியது.யாருக்கும் தொந்தரவில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவள் அன்று செய்து கொண்ட முடிவு... தற்கொலை!அந்தச் சிறுமியின் அதிர வைத்த தற்கொலை ஏற்படுத்திய மாபெரும் பாதிப்பால் உலகம் முழுக்க உருவானதுதான், தற்கொலையை தடுக்கும் அமைப்பு! `சிநேகா' என்ற பெயரில் நம்மூரிலும்கூட இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.மேலே சொன்ன சம்பவம் ஒரு மேற்கத்திய நாட்டில் நடந்தது. எக்ஸ்போஷர்கள் அதிகமுள்ள மேற்கத்திய நாட்டில் இருக்கும் ஒரு சிறுமிக்கே தன் உடலில் ஏற்படும் மாறுதல் குறித்து இத்தனை குழப்பங்கள் என்றால், நம் நாட்டுச் சிறுமிகள், டீன்ஏஜர்களின் நிலைபற்றிச் சொல்லவும் வேண்டுமா?நமது நாட்டில், வளர் இளம் பருவ பதின் வயதுச் சிறுமிகள் தங்களுக்குள் ஏற்படும் மாற்றத்தை எந்தளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்? தன் உடலுறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும் `பர்சனல் ஹைஜீன்' பற்றி எந்தளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள்.இப்படியொரு அடிப்படைக் கேள்வியோடுதான் பெண்களின் வளர்ச்சி குறித்து ஆராய்ந்து அவர்களுக்கு உதவும் எங்கள் நிறுவனம் மூலமாக இந்த வயதுப் பெண்களை அணுகி வருகிறோம்! ஆனால் இதில் எங்களுக்குக் கிடைத்த பதில் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.கிராமப் பகுதியைச் சேர்ந்த பதின் வயது டீன்ஏஜ் பெண்களிடம் நாங்கள் சில அடிப்படைக் கேள்விகள் கேட்டோம்!உதாரணத்துக்கு ``இரவில் எழுந்து யூரின் போகும்போது, அந்த உடலுறுப்புகளை தண்ணீர்விட்டுக் கழுவிவிட்டுப் படுக்கிறீர்களா?'' என்று கேட்டோம்!``ஐய்யே!... அதெல்லாம் செய்றதில்லை! பகல்லே யூரின் போனாக்கூட கழுவும் பழக்கம் எங்களுக்கு இல்லே!'' என்றார்கள் சிறுமிகள் காஷுவலாக!``இதைப் பற்றியெல்லாம் உங்க அம்மா சொல்லித் தரவில்லையா?'' என்று கேட்டதும், சற்றே யோசித்துப் பார்த்துவிட்டு, ``எங்க அம்மாவே அப்படிக் கழுவறதில்லே!'' என்று சொன்னார்கள் கோரஸாக.பர்சனல் சுத்தம் பற்றி அந்தளவுக்குத்தான் நம்மூர் பெண்களில் சிலருக்கே தெரிந்திருக்கிறது.நகரங்களில்... அதுவும் டாய்லெட் அட்டாச்டு அறைகளில் வசிக்கும் நிலையிலுள்ள சில குடும்பங்களில் வசிக்கும் பெண்கள் தண்ணீர் அருகே இருக்கிறதே என்ற நினைவிலோ, அல்லது பழக்க தோஷத்திலோ அல்லது எக்ஸ்போஷர்கள் தந்த விழிப்புணர்விலோ அந்த உடலுறுப்புகளை உடனே சுத்தம் செய்து கொள்ளலாம்! மற்றபடி பெரும்பாலான இடங்களில் இன்றுவரை இதுதான் நிலை!யூரின் போன பிறகும் அந்த உறுப்புகளை அப்படியே விட்டுவிட்டால் யூரின் மூலம் வெளியாகும் உப்பு படிந்து, அந்த உறுப்புகளின் மென்மையான தசைகளில் நமைச்சல் ஏற்படும்! அப்படி அரிப்பெடுக்கும்போது அங்கே தொற்றும் வர வழி ஏற்படுகிறது.பிற்காலத்தில் குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு பெண்ணின் கருப்பை வாசலான பிறப்புறுப்புகள் சுத்தமின்றி இருந்துவிட்டால், அது, பிறகு குழந்தைப் பிறப்பையும், அந்தக் குழந்தையின் ஆரோக்கியத்தையும் சேர்த்துக் கெடுக்கும்! அதுமட்டுமல்ல... இவளது உடலே ஒருவித துர்நாற்றத்துடன் மாற வாய்ப்பிருக்கிறது. இது பிற்காலத்தில் இவளது திருமண வாழ்க்கையையும் பாதிக்கும்! அதனால் அடிப்படை விஷயமான பர்சனல் ஹைஜீன் குறித்து வளர் இளம் பெண்கள் தெளிவுடன் இருக்க வேண்டியதாக இருக்கிறது.கிராமங்களில் மட்டுமல்ல... நகரங்களிலேயேகூட சில டீன்ஏஜர்களிடம் இந்த அறியாமை அதிகம் இருக்கிறது. குறிப்பாக ``குளிக்கும்போது மறைவிடங்களை சோப் போட்டு நன்றாகத் தேய்த்துக் கழுவுவீர்களா?'' என்று கேட்டபோது,``ச்சீச்சீ! போங்க மேடம்! நாங்க அங்கெல்லாம் கையே வைக்க மாட்டோம்! தேய்ச்சுக் குளிக்கிறதாவது?'' என்று வெட்கப்படுகிறார்கள்!``இதெல்லாம் அசிங்கம்.. இதைத் தொடாதே!'' என்று சிறு குழந்தையாக இருந்தபோது பெற்றோர் சொல்லிக் கொடுத்த விஷயங்கள் பத்துப் பன்னிரண்டு வயதில் திடீரென்று எப்படி மாறும்?வெறுமனே `அசிங்கம்' என்று சொல்லிவிட்டு அவற்றைப் பற்றி பேசாமலேயே இருப்பதைவிட, `கண், காது, மூக்கு போல மறைவிடங்களும் நம் உடலின் முக்கியமான உறுப்புகள், அவற்றை எப்போதும் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்!' என்று வளர வளர குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது பெற்றோரின் முக்கியமான கடமைகளில் ஒன்று!பெண் குழந்தைகள் மட்டுமல்ல... இந்த விஷயத்தில் ஆண் குழந்தைகளும் கூட பர்சனல் சுத்தத்தில் மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கிறார்கள். (அதுபற்றி விரிவாக பிறகு பார்ப்போம்)நம் உடலின் உறுப்புகள் என்னென்ன? அவை நம் உடல்நலத்தோடு எந்த வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறது? பெண்களுக்கு உடல்ரீதியாக என்னென்ன வயதில் எந்தெந்த மாற்றங்கள் ஏற்படும்?பீரியட்ஸ் உருவாகும் முறை... தவிர அந்தச் சமயத்தில் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும்? நாப்கின் அல்லது அங்கே வைக்கும் துணியை எப்படிப் பொருத்த வேண்டும்? எவ்வளவு நேரம் ஒரு துணியை வைக்க வேண்டும்? என்று, அடிப்படை விஷயங்கள் பற்றி குழந்தைகளுக்கு அவை புரிந்துகொள்ள ஆரம்பிக்கும் வயது முதலே (அதிலும் இப்போதெல்லாம் ஓவர் போஷாக்கில் ஒன்பது, பத்து வயதுகளிலேயே `பெரியவளாகி' விடுகிறார்களே!) பெற்றோர்கள் மெதுமெதுவாகச் சொல்லி வைத்தால்தான் சிறுமிகள் அது போன்ற சூழல் வரும்போது, சுகாதாரத்துடனும், பதட்டம் இன்றியும் சமாளிக்கும் மனநிலை பெறுவார்கள்.
Dear Tamil readers,

I would like to inform you that recently i start a New Blog named as thanjaishahul.blogspot.com , If you have any comments or queries post it in my blog to form a tamil group.